🎶 எந்த பெண்ணிலும் இல்லாதா ஒன்று!

பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாடலை இன்று அதுவும் மெல்லிய புல்லாங்குழல் இசையில் கேட்டதில் என்னை மறந்து விட்டேன். அதிலிருந்து இன்று நாள் முழுவதும் இந்த பாடல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

🛎️கேட்ட இடம்: அடையார் பார்க், தக்ஷிண் உணவகம்.

நடிகை குஷ்புவை வர்ணித்து, நடிகர் ராஜா, கேப்டன் மகள் (1993) என்கிற திரு பாரதிராஜா அவர்களின் திரைப்படத்தில் இந்த பாடல் காட்சி இருக்கும். நடிகை குஷ்புவைப் பற்றிய பாடல் என்பதைத் தாண்டி, பாடல் வரிகள் (திரு வைரமுத்து) எளிதாக, அர்த்தத்தோடு இருக்கும். அதோடு மயக்கும் இசை (திரு ஹம்சலேகா), எல்லோருக்கும் புரியும்படி வார்த்தைகளை தெளிவாக பாடியிருப்பார் பாடகர் திரு எஸ். பி. பி. அவர்கள், இதனால் எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. உங்களுக்கும் பிடிக்குமா?

Categorized in:

Tagged in: