ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இரவு காட்சிக்கு இந்தப்படத்திற்கு “தங்க மீன்கள்” இன்று போனேன். மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்த படம் சுமாராக தான் வந்துருக்கிறது. படத்தில் பல நல்ல காட்சிகளை கொடுத்த இயக்குனர் ராம், மொத்ததில் ஒரு அபாரமான படத்தைக் கொடுக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடல் மிக அருமை. அந்தப் பாடலில் மலை உச்சியில் ஓடிவரும் காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம், நாமே அந்த இடத்தில் இருப்பது போல ஒரு உணர்வு அதற்கு யுவன் சங்கர் ராஜா இசையும் அவ்வளவு துணைக் கொடுக்கிறது. அப்பாவிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறும் நாயகனுடன் வராமல் மகளையும் தாழிட்டுவிடும் காட்சிகளில் நாயகி ஷெல்லி கிஷோரின் நடிப்பு யதார்தம். வீட்டில் பூரி உணவு என்பதற்காக தனது தற்கொலை முயர்ச்சியை தள்ளிப்போடும் அந்த சிறுமி அழகு.

இவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்த படத்தில் கடைசியில் திக்கு தெரியாமல் என்ன சொல்கிறோம் என்று புரியாமல், படத்தை முடிக்கிறார் இயக்குனர். தான் பொறுப்பில்லாமல் சுத்தித்திரிவதற்கு தனியார் பள்ளிக்கூடம் எந்த வகையில் பொறுப்பு, படிக்காமல் சுத்தும் மகளை கண்டிக்காமல் அரசுப் பள்ளியில் சேர்த்து விடுவதால் எல்லாம் சரியாகிவிடுமா என்ன?

தங்க மீன்கள்

தங்க மீன்கள்

Update: I came across this fine review about the movie from The Hindu Tamil Edition, which captured my feelings pretty well.

<Quote>

ராம் சொல்வதுபடி, படத்தில் நாயகன் அலைந்து திரியும் மலை உலகமயமாக்கலின் பாதிப்பின் குறியீடு என்றால் எம்ஜியார் பாடல் காட்சிகளில் அணிந்து வந்த கருப்பு கண்ணாடி, புவி வெப்பமாதலின் குறியீடு என்ற உண்மை அறியாமல் கைதட்டி ரசித்த ரசிகன் கடும் குற்றவுணர்வுக்கு ஆளாக வேண்டியிருக்கும். ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?’என்று கவுண்டர் கேட்ட கேள்வி, பின்னாட்களில் தமிழகத்தில் கடும் மின்வெட்டு இருக்கும் என்பதைக் குறியீட்டால் உணர்த்திய வசனம் என்று மரியாதையாக ஒத்துக்கொள்ள வேண்டி வரும்

</Quote>

Categorized in:

Tagged in:

,