டிவியில் படத்தைப் பற்றிய நிறைய கிளிப்பிங்க்/பேட்டிகள் பார்த்து, படம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இந்தப் படத்தை [பாஸ் (எ) பாஸ்கரன்] இன்று சத்யம் திரையரங்கில் பார்த்தேன். படத்தை பற்றி பலர் நிறைய சொல்லிவிட்டதால் சுருக்கமாக என் கருத்து.

படத்தின் ஒரே பலம் அதில் இருப்பதைவிட இயக்குனர் அதில் விட்டுவிட்டது தான் – சண்டை, ஆபாசம், குடும்பத்தை குளைக்கும் சதிகள் போன்றவை இல்லாமல் இருந்தது தான். இதைவிட சிறந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் தமிழில் பல உண்டு, அதனால் எனக்கு இது எதிர்ப்பார்த்த அளவிற்கு எனக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் ரசித்ததில் ஒரு காட்சி, ஆர்யா (Arya) வாழ்க்கையில் உருப்படுவார் என்று பொருத்திருந்து, வெறுத்துப் போய் நயன்தாரா சொல்வது, “வா வீட்டை விட்டு வெளியே போய் கல்யாண் செய்துக் கொண்டு, நான் உன்னையும் சேர்த்து காப்பாத்துகிறேன்” என்பது – அந்த காட்சியில் நல்ல எதார்த்தம்.

கிளைமாக்ஸ் பேத்தல், ஜீவாவை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். மொத்தத்தில், படம் கண்டிப்பாக பார்க்கலாம், பார்க்காவிட்டாலும் தவறட்டது ஒன்றுமில்லை.

Boss-Engira-Baskaran