தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் ஜூன் மாதம் 23ம் நாளிலிருந்து 27ம் நாள் வரை நடக்கயிருக்கிறது. இம்மாநாட்டோடு இணைந்து உத்தமம் நிறுவனம் தனது ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது. இத்தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி ti2010-cpc@infitt.org என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிவிப்பின் ஒளிப் பதிவைக் கீழே பார்க்கலாம்.

(இந்த ஆண்டு உத்தமத்தின் தலைவராக நான் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன், அதற்காக உறுப்பினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி)