தமிழில் வெளிவந்த தற்கால நகைச்சுவை நாடங்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படுவது அய்யா… அம்மா… அம்மம்மா… 

என் சிறு வயதில் சென்னை தொலைக்காட்சியில் முதல் தடவையாகப் பார்த்ததில் இருந்து என்னை மிகவும் கவர்ந்த நாடகம் இது. தொலைக்காட்சியில் மட்டும் இல்லாமல் ஒலிநாடாவில் (Audio Cassette) பலப்பல முறை நான் கேட்ட நாடகம் இது. ‘கிரேசி’ மோகன் (Crazy Mohan) எழுதி காத்தாடி ராமமூர்த்தி (Kathadi Ramamurthy) நடித்த இந்த நாடகம், இதற்குப்பின் தமிழில் வெளிவந்த அனைத்து நகைச்சுவைப் படைப்புகளிலும் (சினிமா, நாடகம், கதை) தனது தாக்கத்தைப் பதித்துள்ளது. பிற்காலத்தில் ‘கிரேசி’ மோகன் எழுதிய பல பிரபலமாக நாடங்களில் அவரையும் அறியாமல் சில இடங்களில் இதன் துணுக்குகளை நாம் கேட்கலாம்.

ஒலிநாடாவில் மட்டுமே வெளிவந்த இந்தப் படைப்பு இப்பொழுது ஓளிதட்டு (VCD) வடிவில் வந்துள்ளது. போன வாரம் Landmark கடையில் பார்த்தவுடன் இதை வாங்கியதில் (ரூ 199) எனக்கு மகிழ்ச்சி. ஒரு சிறு ஏமாற்றம் இது சென்னை தொலைக்காட்சியில் வெளிவந்த காத்தாடி ராமமூர்த்தியுடன் டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்த மூலப்பிரதி அல்ல, இது சமீபத்தில் பதிவு செய்யப்பட்ட பதிப்பு. இருந்தாலும் இந்த நாடகத்தை இதுவரை பார்க்காதவார்கள் உடனே இந்த ஓளிதட்டை வாங்கிப் பார்க்கலாம்.

Ayya Amma Ammamma - Kaathaadi Ramamurthy

Update 2018:

காத்தாடி ராமமூர்த்தி மற்றும் டெல்லி கணேஷ்
காத்தாடி ராமமூர்த்தி மற்றும் டெல்லி கணேஷ்

சில நாட்களுக்கு முன் பார்த்த போது, நான் மேலே குறிப்பிட்ட  சென்னை தொலைக்காட்சி பதிவை YouTubeஇல் ஆறு பாகங்களாகப் பார்த்தேன். Part 1, Part 2, Part 3, Part 4, Part 5 & Part6
(Disclaimer: I am not clear of the copyright of this publication, please use your own discretion)

Tagged in:

,