கிரிடம் (Kireedam) ஒரு சண்டைப் படம். வாழ்க்கையில் சாதிக்கும் தருனத்தில் கனவுடன் இருக்கும் சாதாரண ஒரு இளைஞனின் வாழ்க்கை விதியால் எப்படி மாறுகிறது என்பது தான் கதை. கண்டிப்பாக கதை புதிதில்லை, ஆனாலும் அழகாக அதை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளார் புது இயக்குனர் விஜய் (A.L.Vijay).  அதற்காக அவரைப் பாராட்டலாம்.  அஜித் (Ajith) அசத்துகிறார், ஆச்சரியமாக இருக்கிறது – எப்படி மனிதர் நாளாக நாளாக வயதைக் குறைத்து வருகிறார் என்று. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டிக்குள்ளே தனியாக இருக்கிறோம் என நினைத்து அஜித்திடம் அவரின் குடும்பத்தை திட்டி தீர்கிறார் த்ரிஷா (Trisha Krishnan), அதை கீழே குழாய் மூலமாக முழு குடும்பமும் கேட்கும் காட்சி, நல்ல காமெடி; அதே போல திருடன் என்று நினைத்து அஜித்தின் வீட்டினரிடமே அவரை தேடி த்ரிஷா சுத்தி வரும் காட்சியும் சரியான சிரிப்பு வேடி, விவேக்கும் நன்றாக செய்துள்ளார் அந்த காட்சிகளை.

கிரிடம் (Kireedam)

கிரிடம் (Kireedam)

சினிமா தனம் இல்லாத யதார்தமான முடிவு.  வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாகப் பார்க்கலாம்.

Categorized in:

Tagged in:

, ,