“ஒன்றன் பின் ஒன்றாக உலகில் இருக்கும் எல்லா கார்களையும் நிற்க வைத்தால் அவை எவ்வளவு தூரம் இருக்கும்? பூமியில் இருந்து நிலவிற்கு இந்த வரிசை நீளுமா?”
“கார்களுக்குப் பதிலாக, பக்கவாட்டில் ஒருவர் பக்கத்தில் ஒருவராகத் தோளோடு தோள் உரசி, உலகில் தற்போது வாழும் அனைத்து மனிதரையும் நிற்க வைத்தால், எவ்வளவு தூரம் அந்த வரிசை இருக்கும்?”
நேற்று மாலை தூங்கும் முன்னர் ஏனோ இந்த இரண்டு கேள்விகள் மனதில் தோன்றின. காலை எழுந்தவுடன் சாட்ஜிபிடியிடம் (ChatGPT) கேட்டேன். செயற்கை நுண்ணறிவு (AI) எதற்கு உதவுகிறதோ இல்லையோ, இது போன்று மனதில் தோன்றும் “எல்லா” எண்ணங்களையும் உடனுக்குடன் கேட்டு, விடையைத் தெரிந்துகொள்ள முடிகிறது. சாட்ஜிபிடி சொல்லிய பதிலை கூகுள் ஜெமினியிடம் (Google Gemini) கேட்டுச் சரிபார்த்துக் கொண்டேன்.
இது போன்ற கேள்விகளுக்குப் பெயர், ஃபெர்மி கேள்விகள் (Fermi problems), அல்லது அனுமானக் கணக்குகள் (Guesstimates). இவை ஒருவரின் தர்க்கரீதியான சிந்தனை மற்றும் கணிதத் திறனைச் சோதிக்க உதவுகின்றன. கூகுள் போன்ற பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை (Consulting) நிறுவனங்களின் நேர்காணல்களில் பொதுவாகக் கேட்கப்படுகின்றன.
நோபல் பரிசு பெற்ற இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மி (Nobel Prize-winning physicist Enrico Fermi) தன் மாணவரிடம், “சிகாகோவில் எத்தனை பியானோ டியூனர்கள் உள்ளனர்?” என்று கேட்டதன் மூலம் இவ்வகைக் கேள்விகளுக்கு இந்தப்பெயர் வந்ததாம்.
துல்லியமான விடையைக் கண்டறிவதை விட, அரைகுறைத் தகவல்களைக் கொண்டு பெரிய சிக்கல்களை எவ்வாறு பகுத்து ஆராய்கிறீர்கள் என்பதைச் சோதிக்கவே இவை பயன்படுகின்றன.
ஏ.ஐ. வந்த பிறகும் நேர்காணல்களில் இவை கேட்கப்படுகின்றனவா என்று தெரியவில்லை. நேர்காணல்களில் பங்குபெற்றவர் பகிரவும்.


Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


interesting ! on fermi concept. Enrico Fermi god father of Atomic bomb
That part of him never came to my mind, even though the name sounded familiar. Thanks for reminding about his ‘main’ work :-)