எங்கள் வீட்டில் நேற்று மாலை நடந்தது இது. வரவேற்பறை முகப்பு மாடத்தில் (பால்கனியில்) இருந்து ‘தொப்’ என்ற சத்தம். என்னவென்று போய்ப் பார்த்தால், கார் நிறுத்துமிடத்தின் மேற்கூரையில் ஒரு மைனா பறவை இறந்து விழுந்திருந்தது. அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். திடீரென எங்கிருந்தோ ஒரு கரும்பருந்து (Black Kite) பறந்து வந்தது. அதிவேகமாக அந்த மைனாவை லபக்கென்று காலில் கவ்விக் கொண்டு போய்விட்டது.
பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. வேட்டையில் கூட இயற்கையின் வழியே அழகு என்று தோன்றியது. அதனோடு “நாம் இரையாகாதவரை” என்ற எண்ணமும் சேர்ந்து தோன்றியது!
காமிராவை எடுத்துப் படமெடுப்பதற்குள் எல்லாம் ஓரிரு நொடிகளில் முடிந்துவிட்டது. அதனால் வெறும் அந்தத் தகரக் கூரையைப் படமெடுத்து, செய்யறிவைப் (AI) பயன்படுத்தி இந்தக் காணொலியைச் செய்துள்ளேன்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

