Perplexity AI and Google Search showing results differently

தினமும் பயன்படுத்தினாலும் இப்போது தான் இந்த முரணைக் கவனித்தேன். பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity AI) தளத்தில் ஏதாவது கேட்டால், இணையத்தில் இருந்து தேடப்பட்ட சர்ச் என்ஜின் (Search Engine) முடிவுகள் முதலில் வருகிறது. அதற்குப் பிறகுதான் அவர்களின் ஏஐ பதில்கள் காட்டப்படுகிறது.

ஆனால் கூகுள் தளத்தில் கேட்டால், ஜெமினி (Gemini) செயற்கை நுண்ணறிவு அளிக்கும் பதில்கள் முதலில் வருகிறது, அதன் பிறகுதான் கூகுள் சர்ச் என்ஜின் முடிவுகள் தெரிகின்றன.

இரண்டிலும் நான் ஒரே கேள்வியைக் கேட்டேன்: “சென்னையில் சுவையான தோசை எங்கே கிடைக்கும்?” இணைப்பில் உள்ள படங்களைப் பாருங்கள்.

இந்த முரண் ஒரு விதத்தில் வேடிக்கையாகவும் இருக்கிறது. ஏஐ நிறுவனமான பெர்ப்ளெக்சிட்டி தேடுபொறிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. தேடுபொறி நிறுவனமான கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இவர்களில் யார் அளிக்கும் பதில்களை நம்புவது?

எந்த நிறுவனத்தின் செயலி என்பதை விட, நாம் கேட்க நினைக்கும் கேள்வியின் தன்மை முக்கியம். நமக்கு அப்போது வேண்டியது சரியான இணையதள முகவரி அல்லது உறுதியான தகவல் என்றால் தேடுபொறி முடிவுகள் சிறந்தது. ஆனால் நமக்குப் பகுப்பாய்வு செய்யப்பட்ட, தொகுக்கப்பட்ட, சுருக்கமான பதில் வேண்டுமென்றால் ஏஐ விடைகள் வசதியாக இருக்கும்.

Perplexity AI – Search results first (Oct 16, 2025)
Perplexity AI – Search results first (Oct 16, 2025)
Google Search – AI (Gemini) answers first (Oct 16, 2025)
Google Search – AI (Gemini) answers first (Oct 16, 2025)

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

2 thought on “Perplexity AI and Google Search showing results differently”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading