வெளிநாட்டுப் பயணியிடம் தான் விற்கும் பொருளின் விலையைச் சொல்ல வேண்டும், இருவருக்கும் அடுத்தவர் மொழி தெரியாது. என்ன செய்ய? வியாபாரி தன் கையில் இருக்கும் பணத்திலிருந்து ஒரு சில தாள்களை எடுத்து பொருளுக்கு முன் காட்டுகிறார். வாடிக்கையாளருக்கு விலைப் புரிந்து விடுகிறது. இது நல்ல யோசனை அல்லவா!

இந்தக் காட்சியையே இணைப்பில் இருக்கும் படத்தில் பார்க்கிறீர்கள். படத்தில் இருப்பது ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் போகும் வழியில் மலையோரச் சாலையில் துப்பட்டா விற்கும் வியாபாரி. மோட்டர்பைக்கில் வந்து விலையைக் கேட்டு வாங்குபவர் நெதர்லாந்து நாட்டுப் பெண் பயணி. இந்தக் காட்சியை நான் பார்த்த யு-ட்யூப் வீடியோவில் இருந்து எடுத்தது. முழு வீடியோ இங்கே.

வீடியோவில் ஆப்கான் ஜலாலாபாத் நகரில் இருந்து சுமார் 150 கி.மி. தூரத்தில் இருக்கும் காபூலுக்கு மோட்டர்பைக்கில் போகிறார் நொரலி ஷூமேக்கர். போகும் வழியில் இருபுறமும் மலைகள், வலதுபுறத்தில் ஓடும் நதி, எனப் பார்க்கவே ரம்மியமாக இருக்கிறது. சாலைகள் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஆப்கான் என்றாலே யுத்தமும், துப்பாக்கியும் எனப் பார்த்துப் பழகிய நமக்கு அந்த நாட்டின் அழகை ஓர் உதாரணமாக இந்த காணொலி காட்டுகிறது. ஆப்கான் அமைதியாகவும் இருக்குமா என்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் ஓரிரு கிலோமீட்டருக்கு ஒரு முறை தாலிபன் படையினர் நொரலியின் கடவுச்சீட்டைச் சோதனை செய்வது கொஞ்சம் நெருடலாகவும், பயமாகவும் இருப்பது உண்மை.

நொரலி போகவே கடினமான பல நாடுகளுக்கும் ஊர்களுக்கும் தனியாக மோட்டர்பைக்கில் போகும் யு-ட்யூபர், இவரின் ஓடையின் பெயர்: Itchy Boots.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “விலை சொல்ல மொழி தேவையில்லை”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading