அமெரிக்காவில் இருக்கும் கோடிக்கணக்கான பதின் பருவத்தினருக்குத் தற்போதைய மிகப் பெரிய கவலை, 19 ஜனவரி 2025 அன்று வரவிருக்கும் ‘டிக் டாக்’ செயலிக்கான தடை. இந்தியாவில் திறன்பேசி வைத்திருக்கும் முக்கால்வாசி நபர்கள் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்களைச் செலவழிக்கும் யூ-ட்யூப் ஷார்ட்ஸ் (YouTube Shorts) செயலியின் முன்னோடி ‘டிக் டாக்’. 2020இல் சீனாவுடன் ஏற்பட்ட உரசலுக்குப் பின்னர் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுவிட்டது. அப்படியென்ன தான் இருக்கிறது இந்த ‘டிக் டாக்’கில்? ஏன் அமெரிக்க வல்லரசே அதைப் பார்த்து அஞ்சுகிறது? அதன் கதை என்ன?

“டிக் டாக் ஆரம்பித்த சில மாதங்களில் அதில் வரும் வீடியோக்களைத் தானே பார்த்துக் கொண்டு நேரத்தைச் செலவு செய்வதை உணர்ந்த “ஷாங் யிமிங்”, வீடியோக்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தார். அவரோடு பணியாற்றிய உயர்மட்ட அலுவலகர்கள் அனைவரும் வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிட வேண்டும். ஒவ்வொரு வீடியோவுக்கும் குறிப்பிட்டளவு விருப்பக் குறிகளும் வர வேண்டும் இல்லையென்றால் அன்றைக்கு அவர்கள் சில பல தண்டால்கள் எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டார் ஷாங். இதனால் டிக் டாக் செயலியின் உயிர்நாடியான வீடியோக்கள் உருவாக்கத்தை நிறுவனத்தின் எல்லா நிலை ஊழியர்களும் நன்கு புரிந்து கொண்டிருந்தனர்.”

இப்படியான ‘டிக்-டாக்’ செயலியின் கதையை இன்றைய மெட்ராஸ் பேப்பரில் தெரிந்து கொள்ளலாம்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading