இந்தப் படத்தில் இருப்பது நானும், அரசாங்க பதவியில் இருந்தபோது விலையுயர்ந்த பரிசுகள் பெற்ற குற்றத்திற்காக நேற்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூத்த தலைவரும். எங்களோடு மேலும் ஓர் அமைச்சரும் முனைவர்களும் இருக்கிறார்கள்.

பொறுமை!

நான் குறிப்பிட்டது சிங்கப்பூரின் மூத்த அமைச்சராக இருந்த திரு எஸ். ஈஸ்வரன் அவர்களை. நீங்கள் வேறு யாரையாவது நினைத்தால், நானோ எனது அட்மினோ பொறுப்பில்லை. அதோடு, அவரை தவறாகச் சொன்னதற்கு என் நண்பர் திரு வாசு என்னைச் சும்மா விடமாட்டார்.

திரு ஈஸ்வரன், தண்டனையை மனதார ஏற்றுக்கொண்டு ஓர் ஆண்டு சிறைக்கு சென்றதாகச் சிங்கப்பூர் செய்திகள் சொல்கிறது. சிங்கப்பூரில் நடந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது!

படம் எடுக்கப்பட்டது, கோவை செம்மொழி மாநாட்டோடு இணைந்து நடந்த தமிழ் இணைய மாநாடு 2010 தொடக்க நிகழ்ச்சியின் போது. அந்த மாநாட்டை முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் எனது தலைமையில் உத்தமம் என்கிற தன்னார்வத் தொழில்நுட்ப அமைப்பு நடத்தியது என் வாழ்வின் பெருமைக்குரிய நிகழ்வாக இன்றைக்கும் போற்றுகிறேன்.

குறிப்பு: படத்தில் இடதுபுறம் முதலாவதாக இருக்கும் முனைவர் திரு வாசு ரங்கநாதன், “மீசை வைக்காத பிஸ்தா” என்று தமிழ் இணைய மாநாடு 2010 அமைப்பாளர்கள் அனைவருக்கும் தெரியும் என்பது சரித்திர உண்மை! அந்தக் கதையை மாநாடு பற்றிய கட்டுரையில் நான் எழுதவில்லை, நேரில் கேட்டால் மட்டுமே சொல்வேன்.

Tamil Internet Conference 2010 in Coimbatore
Tamil Internet Conference 2010 in Coimbatore

#infitt


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading