ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்க நகரம்

தங்கலாம் திரைப்படத்தில் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தங்கத்தைத் தேடி ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படிக் கடினமான சூழ்நிலையில் வேலைக்குப் போனார்கள் என்று கற்பனையாகக் காட்டியிருப்பார்கள். படம் மோசம், தேவையில்லாத மந்திர, மாயாஜாலக் கதைகளைச் சேர்த்துக் குழப்பியிருப்பார் இயக்குநர் பா ரஞ்சித், ஆனால் அந்த மக்களின் ஆபத்தான வேலைச் சூழல் உண்மை.

அப்படியான பழங்கால முறையில், மனித உழைப்பில் இப்போதும் தங்கம் பூமிக்குக் கீழேயிருந்து வேட்டி எடுக்கப்படுகிறது. இடம் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தின் மேற்கில் இருக்கும் பெரிய நாடான மூரித்தானியா (Mauritania), இந்த நாட்டைப் பற்றி, பெயரைத் தாண்டி ஒரு யூ-ட்யூப் வீடியோவில் தெரிந்து கொண்டேன் – அந்தப் பதிவில் இந்த நாட்டில் விவாகரத்தான மகளிர்களை இங்கேயிருக்கும் ஆடவர்கள் விரும்பி மணக்கிறார்கள் என்று ஆச்சரியமூட்டியிருந்தார் தொகுப்பாளர்.

இந்த நாட்டின் பாலைவன மணலில் பல நூறு அடி ஆழத்தில் இருக்கும் பாறைகளில் தங்கம் சுலபமாகப் பெற முடிகிறது. ஆபத்தான சூழலில் அதி-நவீனக் கருவிகள் இல்லாமல், சுரங்கங்களில் மனிதர்கள் சென்று 24 மணி நேரத்திற்கு மேல் இருந்து தங்கப் பாறைகளை வேட்டி எடுத்துக் கொண்டுவருகிறார்களாம். இங்கே தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதே 2016ஆம் ஆண்டு தானாம், அதுவும் தனி ஒரு மனிதர் கண்டுபிடித்தார் என்கிறது இந்தக் காணொலி. இங்கே பூமிக்கு அடியில், பாறைகளைப் பிளந்து, 800 மைல்களுக்கு மேல் சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறதாம் – அதற்காகவே இந்த ஊரை “தங்கச் சுரங்க நகரம்” என்று அழைக்கிறார்கள். நமக்குத் தங்கம் வேண்டும் என்றால் தி.நகர் உஸ்மான் சாலை சென்று கடன் அட்டையைக் காட்டி வாங்கி வருகிறோம், ஆனால் உண்மையில் அந்தத் தங்கம் எப்படி இந்தக் காலத்தில்கூட மனித உழைப்பில் பெறப்படுகிறது என்பதைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது.

ஆப்பிரிக்கா கண்டத்தைப் பற்றி எப்போதும் சொல்லப்படும் ஒரு வாக்கியம் “எண்ணெய் மற்றும் கனிம வளங்களின் சாபம்”. அதாவது, எந்த நாட்டில் இவை கண்டுபிடிக்கப்படுகிறதோ, அங்கே பெரும் வளர்ச்சியும், செழிப்பும் வராமல், வருகின்ற பணத்தால் பெரும் சண்டைகளும் சுரண்டல்களும் அழிவுகளும் வருகிறது என்பது வரலாறு என்று சொல்வார்கள். ஐரோப்பா நாடான நார்வே, அவர்களின் எண்ணெய் வளத்தைக் கொண்டு இப்போதிருக்கும் மக்களுக்கு மட்டுமில்லாமல் வரும் சந்ததியினர்களும் சேர்த்துச் செழிப்பை உறுதி செய்துள்ளார்கள். அப்படியான ஒரு நிலைமையைத் தங்கம், மிக வறுமை நாடான மூரித்தானியாவிற்கும் வழங்கும் என்று நம்புவோமாக – இதற்கு முன்னர் இங்கே கிடைத்த இரும்புத் தாது வளத்தால் செழுமை வரவில்லை என்கிறார்கள்.

காணொலிகள் கீழேயிருக்கும் கருத்துப் பேட்டியில். நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “ஆப்பிரிக்காவின் தங்கச் சுரங்க நகரம்”

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading