உலகச் செய்திகளுக்காக நான் விரும்பிப் படிக்கும் இணையத்தளங்களில் முக்கியமானது பிரிட்டனிலிருந்து வரும் The Guardian. அவர்களின் ஆழமான ஆய்வுகள் மற்றும் நேர்மையான செய்திக்காகப் பிரபலமானது. இதை நடத்துவது ஒரு தன்னார்வ இலாப நோக்கமில்லாத அமைப்பு, அது மட்டுமில்லாமல் இவர்களின் பாதிக்கு மேற்பட்ட வருமானம் வாசகர்களிடம் இருந்து நேரடியாகக் கிடைப்பவை, விளம்பரத்திலிருந்து இல்லை என்பதும் சிறப்பு.
இன்று பங்களாதேஷ் பற்றிய ஒரு செய்தியில், பாகிஸ்தான் செய்தித்தாளான “Dawn”ஐ பங்களாதேஷ் பத்திரிகை என்று தவறாகக் குறிப்பிடப்பட்டதை பற்றி அவர்களின் “Readers’ Editor”க்கு மின்-அஞ்சல் எழுதினேன். அனுப்பி ஒரு மணி நேரத்தில் சரிசெய்து, பதிலும் போட்டார்கள். அச்சரியமாக இருந்தது. இன்றும் இப்படி ஓர் ஊடக நிறுவனம்! அருமை!

#TheGuardian
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


It is online, so editor was able to update if it is printed version on next edition, they would inform that as note so that is doesn’t mislead the readers. Thanks for pointing out keep it up Ranga…
I prefer reading the Gaurdian, good to know :)