ஆழ்வார்பேட்டை ‘டாமரிண்ட் டேல்ஸ்’ உணவகத்தின் சராசரியானச் சுவை.

Tamarind Tales Restaurant Review
Tamarind Tales Restaurant Review

ஆழ்வார்பேட்டையில் முன்னாள் முதல்வர் திரு. ஸ்டாலின் வீட்டுக்கு அருகில் உள்ள ஜி.கே.மூப்பனர் பாலத்திற்குக் கீழே போகும்போதெல்லாம் டாமரிண்ட் டேல்ஸ் (Tamarind Tales) உணவகத்தைப் பார்த்திருக்கிறேன். இரண்டொரு நாள்களுக்கு முன்னால், மாலைவேளையில் சாப்பிட வெளியில் போகலாம் என நானும் நண்பரும் அங்கே போனோம். ஆறரை மணிக்கே சென்றுவிட்டதால் எங்களைத் தவிர ஓரிருவர் மட்டுமே இருந்தனர். காரை நிறுத்த அவர்களே ஓட்டுநர்களை [Valet Parking] வைத்திருக்கிறார்கள், நமக்குச் சிரமம் இல்லை.

சிறிய இடம்தான். முதலில் இருந்த அறையில் நின்றுகொண்டு சாப்பிடலாம். உள்ளே இருந்த சிறிய அறையில் சுமார் நான்கு மேசைகள் இருந்தன. நல்ல குளிர்சாதன வசதியோடு நன்றாகவே இருந்தது. இங்கே சைவ உணவு மட்டுமே என்பது எனக்கு வசதியாக இருந்தது, பாவம் என் நண்பன்!

எங்களுக்கு வேண்டிய உணவை அட்டவணையிலிருந்து தேர்வு செய்து சிப்பந்தியிடம் சொல்லிவிட்டோம். சில நிமிடங்களிலேயே சுடச்சுட வந்தது. வீட்டுக்கு வாங்கிச் செல்லப் பொட்டலத்தில் என்ன வேண்டும் என்று சொல்வதில் சிறிய சிக்கல். எனக்கு வந்த சிப்பந்திக்குத் தமிழ் தெரியவில்லை; அதன் பிறகு கல்லாவில் இருந்தவரிடம் போய்க் கேட்டுவிட்டுப் பார்சலை ஆர்டர் செய்தேன்.

எங்கள் இருவருக்கும் சேர்த்து நாங்கள் வாங்கியது: ரச வடை, தயிர் வடை, பென்னே தோசை (Benne Dosa), கேரள பரோட்டா. பொட்டலத்தில் இரண்டு தோசையும், ஒரு பரோட்டாவும் வாங்கிக்கொண்டோம்; எல்லாம் சேர்த்து ரூ. 1100 ஆனது. இந்த மாதிரியான உணவகத்திற்கு இது குறைவான விலை என்றே தோன்றியது. தரம் நன்றாக இருந்தது, சுவை சிறப்பாகச் சொல்ல ஒன்றுமில்லை.

இந்தப் பக்கம் போனால் உண்டு பார்க்கலாம். தனித்துவமாக எதுவுமில்லை.

Rasa Vadai
Rasa Vadai
Curd Vadai
Curd Vadai
Benne Dosai
Benne Dosai
Parotta
Parotta
Menu Card - Tamarind Tales, Alwarpet, Chennai
Menu Card – Tamarind Tales, Alwarpet, Chennai
Tamarind Tales, Alwarpet, Chennai
Tamarind Tales, Alwarpet, Chennai
Tamarind Tales, Alwarpet, Chennai
Tamarind Tales, Alwarpet, Chennai
Tamarind Tales, Alwarpet, Chennai
Tamarind Tales, Alwarpet, Chennai

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading