நேற்று முழுவதும் இயக்குநர் திரு பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஒரு பதிவு போட வேண்டும் எனப் பலமுறை தொடங்கிவிட்டேன்.
அவரின் சினிமா எனக்கு இப்படிப் பிடித்திருந்தது – ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தைச் சிறுவயதில் பார்த்தபோது அழுதேவிட்டேன்; ‘அவசர போலீஸ் 100’-இல் எம்.ஜி.ஆர். வருவது அப்படிப் பிடித்தது; இன்று வரை ஏன் ‘ருத்ரா’ (1991) தமிழ் சினிமாவில் வந்த மிகச் சிறந்த வங்கிக் கொள்ளைப்படம், ஏன் ‘ராசுக்குட்டி’ (1992) படத்தை என் வயதினர் இன்றுவரை மறக்க முடியாது என்றெல்லாம் எழுதிக் கொண்டே இருந்தேன். இது எதுவுமே என் நினைவில் அவரை முழுவதுமாகப் பிரதிபலிக்கவில்லை. அதனால் தவிர்த்துவிட்டேன்.
என் நினைவில் இருந்து, நான் தேடிய அவரின் இன்னொரு பக்கம், இன்று காலையில் நினைவிற்கு வந்தது. அது 1988ஆம் ஆண்டு அவர் தொடங்கிய ‘பாக்யா’ வார இதழ். நான் தமிழ் இதழ்கள், நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கிய காலம் அது. அப்போது பெரியவர்கள் குமுதம், ஆனந்த விகடன், துக்ளக் படிப்பார்கள். அவை எனக்குப் பழமையாகத் தோன்றின. எனக்கென்று ஒரு வார இதழை வீட்டில் வாங்க வேண்டும் என்று பார்த்தபோது ‘பாக்யா’ வித்தியாசமாக இருந்தது; பிடித்துப் போனது. அதில் அவரின் கேள்வி-பதில் பகுதிதான் சிறப்பு; அவரின் ஆழ்ந்த கதை சொல்லும் திறன் அதில் வெளிப்படும்.
சினிமாவைப் பற்றி எழுதியதை, பாக்யா கேள்வி-பதில் தொகுப்பைத் தாண்டி, திரு பாக்ய(ராஜ்) நாவல்கள் எழுதியதாக எனக்குத் தெரியவில்லை. அவர் எழுதியிருந்தால் பகிரவும், திருத்திக் கொள்கிறேன். அவர் நாவல்கள் எழுதாமல் போனதால், சாதாரணமானவர்களின் பற்பல அருமையான கதைகளை நாம் கேட்காமலே போய்விட்டோம்.
அவருக்கு மோட்சம் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி.
Discover more from Mangoidiots.com
Subscribe to get the latest posts sent to your email.

