விஜய் அல்லது அஜீத் – உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்கிற கேள்விக்கு ஒருமித்த பதில் வராது. அதுபோலத் தான் கணினியின் இயங்கு தளங்களில் சிறந்தது விண்டோஸா அல்லது லினிக்ஸா என்று கேட்டால் இரு பதில்களும் வரும். இந்தச் சிக்கல்களைத் தவிர்த்து எளிதான ஆனால் கணினிப் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய சிலவற்றைப் பார்க்கலாம்.

🪫மின்கலம் என்கிற பேட்டரி
மடிக்கணினியை எப்போதும் மின்னேற்றியோடு இணைத்து வைத்திருக்கலாமா அல்லது முழுச்சக்தி ஏற்றப்பட்டவுடன் மின்சாரத்தைத் துண்டித்துவிட வேண்டுமா? திரும்ப எப்போது பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும்..? அடிக்கடி சார்ஜ் ஏற்றி, இறக்க வேண்டுமா? எதைச் செய்தால், செய்யாமல் இருந்தால் மடிக்கணினியில், செல்பேசியில் இருக்கும் மின்கலம் பழுதடையாது?

📶வைஃபை ரவுட்டர்
சிலரின் வீடுகளில் ஏர்டெல், ஏ.சி.டி., ரிலையன்ஸ் ஜியோ போன்ற அதிவேக இணையத் தொடர்பு வைத்திருப்பார்கள். அவர்களின் வைஃபை-ரவுட்டரை (WiFi Router) இரவில் அணைத்து விடுகிறார்கள். இது அனாவசியம், செய்யவும் கூடாது.

தொடர்ந்து வாசிக்க, இன்றைய மெட்ராஸ் பேப்பரைப் பார்க்கவும்.

Tagged in: