இன்று மெட்ராஸ் பேப்பரில் வந்திருக்கும் எனதுக் கட்டுரை – புளுடூத் இயர்போன்களோடு எனது போர்கள். உங்கள் கருத்துக்களைப் பகிரவும்.

நீலப் பல் மகாராஜா

ஜெர்மனிக்கு வடக்கே, நார்வேக்குத் தெற்கே இருக்கும் ஒரு சிறிய நாடு, டென்மார்க். இங்கே, பத்தாம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த மன்னர் ஒருவரின் பெயர், ஹரால்ட் புளூடூத். இவர் அருகில் இருக்கும் தீவுகளுக்குச் செல்ல வசதியாகப் பல பாலங்களை அமைத்தார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள். இன்று நாம் பாடல் கேட்கப் பயன்படுத்தும் இயர்போன்களை நம் செல்பேசியோடு இணைக்கும் புளூடூத் தொழில் நுட்பத்தின் பெயர் இந்த மன்னரின் நினைவாக வைக்கப்பட்டதுதான். வைத்தவர் ஓர் இன்டெல் நிறுவன ஆய்வாளர். நம் ஊரில் மரம் நட்ட அசோகரை நினைவுகூர்வதில்லையா? அந்த மாதிரி அவர் பாலம் கட்டிய பரதேச மன்னரை நினைவுகூர்ந்து அவர் பெயரை வைத்திருக்கிறார்.

புளூடூத் தரநிலை

புளூடூத் என்பது கம்பி இல்லாமல், ரேடியோ அலை வரிசையின் மூலமாக மிகக் குறைந்த சக்தியில் அருகில் இருக்கும் மின்-சாதனங்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் ஒரு தர நிலை (ஸ்டாண்டர்ட்). ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும் ஐந்நூற்றுப் பத்து (510) கோடிக்கும் மேலான மின்னணுக் கருவிகளில் இந்த புளூடூத் நுட்பம் இருக்கிறது.

போர்கள் ஓய்வதில்லை

நிற்க. இவ்வளவு விரிவாக இதனைச் சொல்ல ஒரு காரணம் உண்டு. இந்த புளூடூத் இயர்போன்களுக்கும் எனக்கும் பல வருடங்களாகக் கடும் போர் நடந்துகொண்டிருக்கிறது. அதைக் குறித்துச் சிறிது சொல்ல வேண்டும்.

தொடர்ந்துப் படிக்க.

#madraspaper #bluetoothearphone

Tagged in:

,