
Curtain raiser to Navarathri Golu 2021
இரண்டு ஆண்டுகளாக நீண்ட நித்திரையிலிருந்து எங்கள் வீட்டில் இருக்கும் பொம்மைகள் இந்த வருட நவராத்திரி விழாவிற்காக வெளியில் வந்திருக்கிறன.
வீட்டுப் பரணிலிருந்து, எல்லா அட்டைப் பெட்டிகளையும் கீழிறக்கி, பிரித்து, ஒவ்வொன்றாக எடுத்துத் துடைத்து, வகைப்படுத்தி வைக்கும் வேலை இன்றிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. இதற்குப் பிறகு கொலுப் படிக் கட்டி, அதற்குமேல் துணி போட்டு, அலங்காரம் செய்து பொம்மைகளை அடுக்க வேண்டும். எல்லாவற்றையும் செய்ய ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் ஆகும் என்பது என் அம்மா மற்றும் மனைவியின் அனுபவக் கணிப்பு. என் வேலை வேடிக்கைப் பார்ப்பது!
கொரோனா சூழ்நிலையில், பண்டிகையை இணையவழியில் தான் கொண்டாட வேண்டும் போலிருக்கிறது. போன வருடம் மிகச் சிறிய அளவிலான கொலு தான் வைத்தோம். இறைவன் அருளில் அடுத்த வருடத்திற்குள் பெருந்தொற்று உலகத்தை விட்டு முற்றிலும் போய், எல்லோரும் நலமாக வாழப் பிரார்த்திக்கிறேன்.




