
Navarathri Golu 2020
எங்கள் வீட்டில் வருடா வருடம் (2019, 2018), விமர்சையாக, இரண்டு அல்லது மூன்று கொலு அடுக்குகளில், பல படிகளாகக் கொலு வைப்போம். கொரோனா சூழ்நிலையால், என் அம்மாவும் அனுமதித்த காரணத்தால், இந்த ஆண்டு எளிதாக வைத்திருக்கிறோம். ஒரு வட்ட சாப்பிடும் மேசையில், மூன்று மரப் படிகளை வைத்து மிகச் சிறிய அளவிலான கொலு. நண்பர்களை, உற்றார், சுற்றத்தார்களை அழைக்கவில்லை. மன்னிக்கவும்!
எங்கள் சகோதரிகளையும், என் பெற்றோர்களின் உடன் பிறந்தவர்களையும் அவர்களது குடும்பத்தினர்கள் வந்தால் வரவேற்க எண்ணம். அதுவும் முகக்கவசம் கட்டாயம் எனச் சொல்லத் திட்டம்.
கடவுளின் அருளில் அடுத்த ஆண்டு உலக மக்கள் ஆரோக்யமாக, பயமின்றி வாழும் சூழ்நிலை திரும்பி வர வேண்டுகிறேன் – அப்போது நல்ல முறையில் கொலு வைத்து விருந்தினர்களை வரவேற்று உபசரிக்க எண்ணம்.


