இந்த நகைச்சுவை சித்திரத்தை நாளிதழில் பார்த்தபோது கிரேசி மோகன் எழுதி காத்தாடி ராமமூர்த்தி நடித்த மிகப் பிரபலமான நகைச்சுவை நாடகம் “அய்யா அம்மா அம்மம்மா” நினைவிற்கு வந்தது.

அந்த நாடகத்தில் காத்தாடி ராமமூர்த்தி மற்றும் டெல்லி கணேஷ் குமாஸ்தாவாக பணிபுரிவார்கள், அவர்களின் மேலாளர் ஆபிசில் இருக்கும் குண்டூசி, பேனா, காகிதம் இவற்றை திருடி பள்ளிக்கூட பசங்களுக்கு விலைமலிவாக விற்று கம்பெனியை ஏமாற்றுவார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட காத்தாடி மற்றும் டெல்லி அவரை மிரட்டி தங்கள் வேலையை அவரை செய்ய வைப்பார்கள். அந்த நகைச்சுவை தான் நினைவுக்கு வந்தது.

Comments