
Do Tamil Nadu Engineering Aspirants need this much hand holding to fill online forms?
இன்றைய தி இந்து தமிழ் நாளிதழின் முதல் மூன்று பக்கங்களில் வந்ததைப் பார்த்து என் யோசனை தான் இந்தப் பதிவு
எனக்கு இது புரியவில்லை.
தமிழ்நாட்டு பள்ளி மாணவர்கள் இவ்வளவு பின் தங்கியா இருக்கிறார்கள்? இணையத்தில் ஒரு படிவத்தைப் நிறப்பக்கூடத் தெரியாத அளவிற்கு? இந்தளவு படம் போட்டு (இது OK, இது Cancel) எனச் சொல்ல வேண்டுமா?
உடனே, இது மேல் தட்டு மக்கள் – ஏழைகள்; தமிழ் வழிக்கல்வி – ஆங்கில வழிக்கல்வி; இது ஏன் தேவை எனக் காரணங்கள் சொல்ல வேண்டாம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் இதை விடப் புத்திசாலிகள், திறமைசாலிகள். அரசாங்கமும் (அரசியலை விட்டுவிடுவோம்) அவர்களுக்கு மடிகணினி கொடுத்துயுள்ளது, பலரிடம் குறைந்தவிலை அண்டராய்ட்டு செல்பேசி இருக்கிறது, அதில் அவர்களுக்கு இணையப் பயன்பாடு தெரியும்.
பின், எதற்கு இன்றைய தமிழ் தி இந்து நாளிதழ் முதல் இரண்டு பக்கங்களை (அரசாங்க விளம்பரமாகக் கூட இது இருக்கலாம், எனக்குத் தெரியாது) செலவு செய்ய வேண்டும்.
இன்னும் ஒன்று, இந்தப் படிவத்தைக்கூட நிரப்ப தெரியாதவர்கள் பொறியாளர்கள் ஆகப் படித்து வெற்றிப் பெற முடியுமா – பயன் தான் என்ன?



என் பிரச்சனையே, நம்மூரில் எதற்கு, யாருக்கு பயனாக இருக்க வேண்டும் – அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என தெரியாமல் / சிந்திக்காமல் செயல்படுவது தான். முட்டாள் தனம் எனச் சொல்ல வந்து என் நாக்கை நானே கடித்துக் கொல்கிறேன்.

