Why I Ditched Bluetooth Earphones for Wired Headphones
Why I Ditched Bluetooth Earphones for Wired Headphones

எனது ‘நுட்பம்’ நூலைப் படித்தவர்களுக்குத் தெரியும்; நான் எத்தனை வகைகளை வாங்கினாலும், எவ்வளவு விலையுயர்ந்த ஒன்றை வாங்கினாலும் எனக்கும் ப்ளூடுத் இயர்போன்களுக்கும் ஆகவே ஆகாது என்பது.

சமீபத்தில் என் காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவர் சொன்னதைக் கேட்டு, காதுக்குள் போகும் செவிகேளியைத் (இயர்போன்) தவிர்த்து, காது மடலுக்கு மேல் அணியும் தலைகேளியை (ஹட்போன்) வாங்கத் தேடிக் கொண்டிருந்தேன்.

அப்போது இணையத்தில் பரவிவரும் புதுப் போக்கைக் கவனித்தேன். பிரபலங்கள் பலரும் கம்பியில்லா ப்ளூடுத் இயர்போனைத் தவிர்த்து, கம்பியோடு இணைக்கப்பட்ட இயர்போனைகளுக்கு மாறுகிறார்கள் என்று.

இந்த இரண்டை விசயங்களையும் சேர்த்தால் என்னவென்று தோன்றியது. அதாவது, வயர்டு ஹட்போனை வாங்கலாம் எனத் தேடினேன்.

அமேசான் இந்தியா தளத்தில் இந்த வகையில் பல இருக்கின்றன. வெறும் ரூபாய் 600க்கு எனக்குப் படத்தில் இருக்கும் ஹட்போன் கண்ணில் பட்டது. வாங்கிப் பயன்படுத்திப் பார்த்தேன்; கொடுத்த காசுக்கு நன்றாகவே வேலை செய்கிறது. ஒலிவாங்கி (மைக்) நீட்டிக் கொண்டிருப்பதால், நம் வாய்க்கு அருகில் வைத்துக்கொள்ள முடிகிறது. இதனால் தெருவில் நடந்து போகும்போதும் நான் பேசுவது எதிர் முனையில் இருப்பவருக்கு நன்றாகக் கேட்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.

காது மடல்களுக்கு மேல் அணியும் இந்த வகை ஹட்போன்களைப் பயன்படுத்துவதால் காதின் நுட்பமான உள்ளுறுப்புகள் ஓரளவு காக்கப்படுமாம். அடுத்ததாக, இவை கம்பியால் இணைக்கப்பட்டுள்ளதால் இவற்றில் மின்கலம் (பேட்டரி) கிடையாது; அதனால் இவற்றை மின்னூட்டவே (சார்ஜ்) தேவையில்லை.

இந்த வகை ஹட்போன்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியது, அவை எப்படி நம் செல்பேசியோடு இணைக்கப்படுகின்றன என்பதை. அதாவது, அவை செல்பேசியில் இருக்கும் யு.எஸ்.பி-சி (USB-C) பொருந்துக்குழியில் நேரடியாக இணைக்கும்படி இருக்க வேண்டும். பெரும்பாலானவை பழைய முறை பொருந்துக்குழிகளில் (3.5mm) மாட்டுவது போலவே கிடைக்கும் – அவற்றை நம் செல்பேசியோடும், கணினியோடும் இணைக்கப் பொருந்துக்குழி மாற்றிகள் வேண்டும் – அப்படி மாட்டிப் பயன்படுத்துவது இடைஞ்சலாக இருக்கும்.

உங்களுக்கும் ப்ளூடுத் இயர்போன்களைப் பயன்படுத்துவது சலிப்பாகிவிட்டது என்றால், இந்த வயர்டு ஹட்போன் வகையை வாங்கிப் பார்க்கவும்.

குறிப்பு: நான் வாங்கியது விலை குறைந்த வகை. நீங்கள் இசைப் பிரியர், ஒலியின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் உயர் ரக வயர்டு ஹட்போன் வகைகளைத் தேடவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading