
Subramanya Bharathiyar House
நான் பிறந்ததிலிருந்து சென்னைவாசி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்கு பல முறை சென்றிருந்தாலும், அதன் அருகிலிருக்கும் மகாகவி பாரதியார் நினைவு இல்லத்திற்குப் போன நினைவில்லை. இன்று இதற்காகவே கிளம்பிச் சென்று பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.
மகாகவி பாரதியார் (Subramania Bharati, a renowned Tamil writer, poet and freedom fighter) சென்னையில் இருந்த போது அவர் வாழ்ந்த வீடு இது, அதைத் தமிழக அரசு 1991ஆம் ஆண்டு வாங்கி, புனரமைத்து 1993ஆம் ஆண்டு மக்கள் பார்வைக்குத் திறந்தது. நல்ல முயற்சி. ஆனால் வெறும் புகைப்படங்கள் மட்டும் தான் இங்கே இருக்கிறது. இந்த மாபெரும் கவிஞரின் எழுச்சிமிகு கவிதைகளைத் தேர்ந்தேடுத்து, பல உலக மொழிகளில் அதன் மொழி பெயர்ப்புகளையும் சேர்த்து, வரும் மக்கள் பார்வைக்குப் படங்களாகவும், புத்தகங்களாகவும், ஒலி ஒளி காட்சிகளாக வைத்திருந்தால் பயனாக இருந்திருக்கும்.
மகாகவி பாரதியார் நினைவு இல்லம் (Subramania Bharati Memorial Home) இருப்பது திருவல்லிக்கேணி துளசிங்கபெருமாள் கோயில் தெரு (Google map location), உங்கள் வாகனத்தைக் கோயில் வாசலில் இருக்கும் இடத்தில் நிறுத்திவிட்டு வரலாம், இரண்டு நிமிட நடைக்கூடயில்லை.
பார்வை நேரம்: காலை 9:45 மணி முதல் 5:45 மணி வரை. கட்டணம் எதுவும் இல்லை, இலவச அனுமதி. ஒரே தளம் தான். முழுவதும் பார்க்க இருபது நிமிடங்கள் போதும்.
இல்லத்திற்குப் பின் பகுதியில், ஒரு பொது நிகழ்ச்சிகள் அரங்கு இருக்கிறது – வசதியானதாகத் தெரிகிறது, இங்கே தமிழ் மொழி, கவிதை நிகழ்ச்சிகள் நடக்கும் என நினைக்கிறேன். நல்ல ஏற்பாடு.







