விவசாயிகளுக்கு பயந்தரும் பல செய்திகளை தர ஒரு செல்பேசி செயலியையும், வலைத்தளத்தையும் – விவசாயம் என்ற பெயரில் நண்பர் செல்வ முரளி, சிறப்பாக நடத்தி வருகிறார். இதில் வருமானம் அதிகம் இல்லையென்றாலும் ஒர் தன்னார்வ முயற்சியாக, அவரின் ஆர்வத்தில் நடத்துகிறார். இவரின் “விவசாயம்” குறுஞ்செயலிக்கு தமிழக அரசின் 2015 ஆண்டிற்கான ‘முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது’ வழங்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

இன்றைய “விவசாயம்” இணைய இதழில், “விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள்” என்ற தலைப்பில் என்னுடைய ஒரு பேட்டி வந்துள்ளது. பார்க்கவும் (PDF).

இதில் நான் குறிப்பிட்டுள்ள விஷயங்கள்:

இன்றைய சூழ்நிலையில் விவசாயித்திற்கு முக்கிய பிரச்சனை இரண்டு – அவை: நிதி மற்றும் தகவல் பரிமாற்றம்.

நாம் அனைவரும் விவசாயிக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்க முயற்சி செய்யவேண்டும். அதே சமயம் விவசாயத்தினை குறைந்த அளவிலான விவசாயிகளே செய்ய வேண்டும் , அதிக உற்பத்தி மற்றும் லாபகரமாகவும் இருக்க வேண்டும். அவர்களின் பிள்ளைகளும் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும்.

ஒரு இரண்டு சக்கர வாகனம் உருவாக்கும் ஆலையில் அன்றைக்கு என்ன தேவையோ அந்த மூலப் பொருட்கள் மட்டும் தான் இருக்கும், ஒன்றுக் கூட, ஒன்று குறைந்தோ இருக்காது – அந்த அளவு அவர்கள் திறமையாகவும்,விரையம் இல்லாமல் இருக்க முடிகிறது. இந்த முறைக்கு ஜப்பானியர்கள் காண்பாண் (Kanban–Just in time manufacturing) என்ற முறையே வைத்திருக்கிறார்கள். இதே போல நாம் விவசாயத்திற்கு செய்ய வேண்டும், கணினி உதவிக் கொண்டு நம் நாட்டில் இருக்கும் அறிவார்ந்த மென்பொருள் வல்லுனர்களைக் கொண்டு. இயக்குனர் ஷங்கரின் “பாய்ஸ்” படத்தில் “செந்தில்” சொல்வது போல “தகவலே செல்வம்” (Information is Wealth), காணொளியைப் பார்க்க.

உண்மையில் வங்கிகள் நம்முடைய நண்பர்கள், அந்த நண்பர்களை எதிரியாக்குவதும், நண்பர்களாக்கிக் கொள்வதும் நம்முடைய கையில் உள்ளது. கடனை திருப்பி கொடுத்து, எல்லா விவசாயிகளும் கம்பீரமாக நடைப்போடும் நிலைக்கு வர வேண்டும், வர முடியும்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை விவசாயி உணர்ந்து அதை உருவாக்கி விற்கட்டுமே? விவசாயி தான் உற்பத்தி செய்யும் பொருளை அது விற்பனை ஆகும் இடத்திற்கு சென்று பார்க்கட்டுமே – அது சூப்பர் மார்க்கெட் என்றால் அங்கே செல்லட்டுமே, யாராவது தடுப்பார்களா என்ன?. இவர்கள் இப்படி சொன்னார்கள், அவர்கள் அப்படி சொன்னார்கள் என்பதை நம்பி உற்பத்தி செய்வதை விட விவரமறிந்து பயிர் செய்யலாமே.

Update: It is a coincidence that The Hindu Newspaper on 11th Dec 2017, carried an article about how “A banana farmer stepped into city shops recently, to speak to his end customers directly

Update – October 2021

நண்பர் திரு செல்வா முரளி அவர்கள், இந்த மாத அக்ரிசக்தி மாதயிதழில் இந்தப் பேட்டியைப் பதிப்பித்துள்ளார், அவருக்கு நன்றி.

Go to page 15 in the current issue (PDF) to read my interview titled "Know the details of what you sow"

பக்கம் 15யில் என்னுடையப் பேட்டி (PDF இணைப்பில்)

Update – November 2021

பேட்டியின் இறுதி இரண்டு பக்கங்கள் கீழே:

அக்ரி சக்தி 50வது பதிப்பு - பக்கம் 32 - விவரமறிந்து பயிர் செய்

அக்ரி சக்தி 50வது பதிப்பு – பக்கம் 32 – விவரமறிந்து பயிர் செய்

அக்ரி சக்தி 50வது பதிப்பு - பக்கம் 33 - விவரமறிந்து பயிர் செய்

அக்ரி சக்தி 50வது பதிப்பு – பக்கம் 33 – விவரமறிந்து பயிர் செய்

முழு இதழும் இங்கே (PDF).

Tagged in:

,