
Ashok Nagar, Chennai Public Library
மாலை நேர நடைப் பயிற்சி போதுப் பார்த்தேன். சென்னை அசோக் நகர் (11வது ஆவென்யூ) பொது நூலகத்தில் ஒரு புத்தகக்காட்சி நடைபெறுகிறது, இந்த மாதம் இறுதி வரை. தமிழ் மற்றும் ஆங்கிலம், குழந்தைகள் புத்தகம் என பலவும் உள்ளது. அந்த பக்கம் போனால் பார்க்கவும்.






உத்தமம் நண்பர் திரு. நா.கண்ணன் (Narayanan Kannan) அவர்களின் புத்தகம் ஒன்றை அங்கே காட்சியில் பார்த்து, அதன் படத்தை அவருடன் பகிர்ந்துக் கொண்டதில் மகிழ்ச்சி.

அசோக் நகர் பொது நூலகம் 2015 வெள்ளத்தில் மூழ்கி அனைத்துப் புத்தகங்களும் வீணாகி விட்டது. அதன் பின் தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பு நூலகத்தை அருமையாக சீரமைத்துக் கொடுத்துள்ளது. மிக சுத்தமாக, நல்ல முறையில் பராமரிக்க படுகிறது.



One Comment
S MURALIDHARAN
மிக்க நன்றி.பயனுள்ளதாக உள்ளது.copy& paste தற்சமயம் இருந்தாலும் தமிழ் விசைப்பலகை சிறப்பாக செயல்படுகிறது