வெளிநாடுகளுக்குப் போகும் போது இந்தப் பழத்தைப் பார்த்திருக்கிறேன். அவங்க ஊர் தக்காளியோ அல்லது ஸ்க்வாஷோ (அமெரிக்கப் பூசணி) என்று நினைத்துத் தவிர்த்துவிடுவேன்.
இரண்டு தினங்களுக்கு முன் ஒரு நண்பனை அழைத்த போது, தி.நகர் கங்கா ஸ்வீட்ஸ் ஊட்டி பழக்கடையில் இருக்கிறேன், ஜப்பான் பழம் வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றான். “அது என்னடா ஜப்பான் பழம்?” என்றேன். உடனே ஒரு படம் எடுத்து, அதன் பெயர் பெர்ஸிமன் (Persimmon) என்று எழுதி வாட்ஸாப்பில் அனுப்பினான்.
நேற்று ‘பிளிங்கிட்’ (Blinkit) செயலியில் தேடி இந்தப் பழத்தை வாங்கினேன். இரண்டு பழம், 250 கிராம் – விலை ரூபாய் 123.
ஒரு பழத்தை இன்று எடுத்துச் சந்தேகமாக அறுத்துச் சாப்பிட்டுப் பார்த்தேன். கடிக்கும் போது இழைவும் அடர்த்தியும் பேரிக்காய் (Pear) போன்று இருந்தது. விழுங்கும் போது இதன் சுவை பப்பாளிப் பழத்தை நினைவுபடுத்தியது. இனிப்பும் அளவாக இருந்தது.
பெர்ஸிமன் பழத்தைச் சாப்பிட்டது ஒரு புதுமையான அனுபவம் என்றே சொல்லலாம். நீங்கள் சாப்பிட்டு இருக்கிறீர்களா? உங்களுக்கு இந்தப் பழம் பிடிக்குமா?



பின்குறிப்பு: சாட்ஜிபிடியிடம் (ChatGPT) இதைப் பற்றிக் கேட்டபோது, இதற்கு ‘கக்கா பழம்’ அல்லது ‘ராமச்சந்திரப் பழம்’ என்று பெயர் இருப்பதாகச் சிலாகித்துச் சொன்னது. ஆனால், நம்மூரில் பரவலான பெயர் ‘ஜப்பான் பழம்’ தான்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


friend family gave once, I felt it was good and like it. rich in fiber and antioxidants