செயற்கை நுண்ணறிவை மாணவர்களும் ஆசிரியர்களும் எப்படிப் பயன்படுத்தலாம்?

இன்று கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்குப் பெரிய தலைவலியாக வந்திருப்பது இயற்றறிவு (ஜெனரேட்டிவ் ஏஐ). தற்போது சில மாணவர்கள் இதைக் கொண்டு ஏமாற்றுவதற்குப் பயன்படுத்துதலே முக்கிய பிரச்சனை. எல்லா புதிய நுட்பங்களைப் போல இதுவும் இருமுனைக் கத்தியே.

உண்மையில் மாணவர்களின் கற்றலுக்கு செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு என்னும் ஏஐ) பெரிதும் உதவ முடியும். குறிப்பாகத் திறமையான ஆசிரியர்கள் இல்லாத கிராமப் புறங்களில், சிறு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு  செய்யறிவு தங்களின் தனிப்பட்ட ஆசானாக வேலை செய்யும். எத்தனை முறை சந்தேகம் கேட்டாலும் பொறுமையாகப் பதில் சொல்லும், திட்டாது,  குச்சியைக் கொண்டு கையில் அடிக்காது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் அவருக்கு விருப்பமான முறையில் புரியும் வரை விளக்கக் கூடிய ஆசான் இயற்றறிவு.

அதே போல இன்று குறும்படங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளைகளுக்குச்  சுவாரஸ்யமாக பாடம் எடுப்பது எப்படி என்று கல்வியாளர்கள் திணறுகிறார்கள். அவர்களுக்கு வரப்பிரசாதமாக இயற்றறிவு இருக்க முடியும் – குறிப்பிட்ட பாடத்திற்கு ஒரு பாடத்திட்டத்தை, வீடியோவை, ஒரு பாடலை, ஒரு செய்முறை விளக்கத்தைச் சுலபமாக உருவாக்கிக் கொடுக்க முடியும். அமெரிக்காவில் மியாமி பள்ளிகளில் வரலாற்றுத் தலைவர்களைப் பற்றி உயிரோட்டமாக கற்க மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

இதெல்லாம் வருங்காலத்தில் இல்லை. பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒரு திறன்பேசியும், இணையத் தொடர்பும் இருந்தால் போதும். பல நிறுவனங்களின் ஏஐ செயலிகள் இவற்றைச் செய்யுமென்றாலும் கூகுள் கற்றலுக்காகவே இரண்டு இணையத் தளங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவை நோட்புக்-எல்-எம் (Google NotebookLM) மற்றும் லெர்ன்-எல்-எம்  (LearnLM). முதலாவது மாணவர்களுக்கு உதவும், இரண்டாவது ஆசிரியர்களுக்கு மிகவும் பயனாகவிருக்கும். இரண்டுமே இலவசமாகக் கிடைக்கிறது (இணைய முகவரிகள் கீழே).

இந்த இரண்டு வசதிகளைப் பற்றியும் எளிமையாக ஷானும் நானும்  இன்றைய பாட்காஸ்டில் பேசியிருக்கிறோம் (கீழே). சிறிய செயல் முறை காட்சிகளும் கூட இருக்கிறது.   பார்த்துவிட்டு உங்களின் கருத்துகளைப் பகிரவும். வரும் நாட்களில் எதைப் பற்றி நாங்கள் பேசலாம் என்றும் சொல்லலாம். இது வரை வந்த பதிவுகள் நன்றாக இல்லையென்றாலும் (தயவுசெய்து தன்மையாக) சொல்லலாம், திருத்திக் கொள்கிறோம்.

Notebook: notebooklm.google
LearnLM: cloud.google.com/solutions/learnlm

30th July 2025: இப்போது Video Overview வந்தாச்சு

ஒலி மட்டுமில்லை. இன்றிலிருந்து கூகுள் நோட்புக்-எல்-எம்மில் (Google NotebookLM) “ஒலியும் ஒளியும்” கிடைக்கிறது.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading