அந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணியின் மேனேஜர் ஓர் அதிசயமான குதிரையைக் கண்டு கொண்டார். கிரிக்கெட் விளையாடத் தெரிந்த குதிரை அது. சென்னை சூப்பர் கிங்ஸ் தலை தோனி மாதிரி பேட்டிங் செய்யக்கூடிய ஒரு குதிரை.
உடனே மேனேஜர் அந்தக் குதிரையை அழைத்து தனது அணியில் ஒரு சோதனை அட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். குதிரை கிரீஸில் நின்று, முதல் பந்தையே பெரிய விளாசு விளாசியது. பந்து உயரப் போன திசையைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தது குதிரை. “ஓடு! ஓடு!” என அணியின் மேனேஜர் கத்தினார்.
குதிரை கோபமாகத் திரும்பிச் சொன்னது: “என்னால் ஓட முடிஞ்சிருந்தா, கிரிக்கெட் விளையாடவா வந்திருப்பேன்? இந்தியன் டெர்பி (புகழ்பெற்ற குதிரைப் பந்தயம்) ரேஸில் தானே ஓடிக்கிட்டிருப்பேன்!”
மூலம்: ரீடர்ஸ் டைஜெஸ்ட் இந்தியா, மே 2025 இதழ், பக்கம் 98. அமெரிக்க பேஸ்பால் ஜோக்கை கிரிக்கெட்டுக்கு மாற்றி தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.
குறிப்பு: முன்பெல்லாம் வாரயிதழ்களில், நாளிதழ்களில் நல்ல நகைச்சுவை துணுக்குகள் வரும். நாளின் அலுப்பிற்கு நடுவில் அவை ஆறுதலாக இருக்கும். இன்றும் ரீடர்ஸ் டைஜெஸ்ட் இந்தியா (Reader’s Digest, India) இந்த வகைத் துணுக்குகளை வெளியிடுவது மகிழ்ச்சி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

