Songkran in Thailand: A Joyful Water Festival That Awakens Your Inner Child

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு முன் (பெருந்தொற்றுக்கு ஓர் ஆண்டு முன்னர்) தாய்லாந்து சோங்க்ரான் பண்டிகையில் பங்கேற்ற போது எடுத்த படங்களை இணைப்பில் பார்க்கலாம். தாய்லாந்து நாட்டின் பல நகரங்களில் தெருக்களில் போவோர் வருவோர், ஒருவர் மீது ஒருவர் மகிழ்ச்சியாகத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் விளையாட்டு சோங்க்ரான். இதன் கலச்சாரப் பின்னணியைக் கீழே கொடுத்துள்ளேன் (ஆதாரம்: ஆங்கில விக்கிப்பீடியா)

தாய்லாந்து கிளுகிளுப்புக்குப் பெயர் போன நாடென்பதை மறுக்கவில்லை. இருந்தும் நான் போய் வந்த நான்கு ஐந்து முறை பயணங்களின் போது, குறிப்பாக சோங்க்ரான் போதும் கூட பாதுகாப்பாக உணர்ந்த நாடு தாய்லாந்து. நம் இந்தியாவை விட பொது இட ஒழுக்கம், நகர் சுத்தம், பயணிகளைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் இருக்கும் நாடு தாய்லாந்து.

எல்லோரும் ஒரு முறையெனும் சோங்க்ரான் பண்டிகையின் போது, இது ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி வரும், தாய்லாந்து போய் வரவும். நம் ஒவ்வொருவரின் உள்ளேயிருக்கும் சிறுவர்களை வெளிக் கொண்டுவரும் பண்டிகை இது. நண்பர்களோடு, அல்லது குழுவாக, அல்லது குடும்பத்தோடு (பதின்ம வயதினரைத் தவிர்த்து) போவது மேலும் மகிழ்ச்சியாக அமையும்.

With a water cannon during Songkran
With a water cannon during Songkran
Crowds cheering and playing Songkran in the streets of Bangkok
Crowds cheering and playing Songkran in the streets of Bangkok
To reload water, you purchase from street vendors for a nominal fee
To reload water, you purchase from street vendors for a nominal fee
Venkatarangan Thirumalai trenched in water after a walk through the streets of Bangkok during Songkran
Venkatarangan Thirumalai trenched in water after a walk through the streets of Bangkok during Songkran
Crowds cheering and playing Songkran in the streets of Bangkok
Crowds cheering and playing Songkran in the streets of Bangkok
Variety of toy water cannons for sale
Variety of toy water cannons for sale
Joyful chaos in the streets of Bangkok during Songkran Festival
Joyful chaos in the streets of Bangkok during Songkran Festival
Everyone, from kids to adults, armed with water guns and buckets, ready for a splashy celebration! (April 13, 2019)
Everyone, from kids to adults, armed with water guns and buckets, ready for a splashy celebration! (April 13, 2019)
Streets of Bangkok during Songkran Festival
Streets of Bangkok during Songkran Festival

குறிப்பு: சோங்க்ரான் எனும் சொல் ‘சங்கிராந்தி’ (சமஸ்கிருதம்) என்பதிலிருந்து பிறந்தது – கதிரவன் ராசி மாறும் நிகழ்வை இது குறிக்கிறது. இந்த விழாவின் புராணக்கதையில், இந்திரனின் சாபத்தால் தர்மம் இழந்த மக்கள் போதிசத்துவரின் வழிகாட்டுதலில் நல்லொழுக்கத்தை மீண்டும் பெற்றனர். இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் நீரும் வண்ணப் பொடிகளும் கொண்ட விளையாட்டாக இது உருவானது. இன்று இப்பண்டிகை புத்தாண்டு, மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றை உலகுக்கு உணர்த்துகிறது!

#songkran #bangkoktravel #2019travel #thailand

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

One thought on “Songkran in Thailand: A Joyful Water Festival That Awakens Your Inner Child”
  1. Good to know, I liked your spirit on enjoyment by seeing your photo. I think it is similar to Manjal Thaneer traditional game

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading