“இப்படியான ஓர் இனிப்பை நீங்கள் சாப்பிட்டே இருக்க மாட்டீங்க, இது குஜராத் சூரத் நகரில் மட்டுமே கிடைக்கும் பாதம் பிஸ்தா சூரத் காரி. அதுவும் இந்தவகை இனிப்புக்காகவே பெயர்போன கடையான ‘ஷா ஜம்னதாஸ் சி. காரிவாலா’வில் இருந்து வாங்கி வந்திருக்கிறேன். நீங்கள் எனக்குக் கொடுத்த உங்களின் அருமையான ‘நுட்பம்’ புத்தகத்திற்கு இதைப் பரிசாக வைத்துக் கொள்ளவும். இனிப்பைச் சாப்பிட்டுவிட்டு ஒரு பதிவும் போட வேண்டும், என் பெயரை எழுதக்கூடாது என்று சொல்லிச் சென்றார் நண்பர்“.
இது என்னடா நம் எடைக்கு வந்த சோதனை என்று எண்ணிப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தால்… நான் நினைத்தது போலவே, ஒவ்வொரு வட்டத்துண்டின் மேல் அது வெண்ணெய்யா அல்லது நெய்யா என்று புரியா வண்ணம் ஒரு பூச்சு. இப்படியான கெட்டி நெய்யை நான் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. ஒரு விண்டு உடைத்து வாயில் போட்டால், பாதாம், பிஸ்தாவைத் தாராளமாகச் சேர்த்து கொஞ்சம் சர்க்கரையைக் கலந்து அடர்த்தியாகப் பிசைந்த மாவில் செய்த பூரணம். ஆனால் ஒவ்வொரு வாயும் சுவையோ சுவை.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

