சென்னைப் போக்குவரத்து காவல்துறை நகரின் பல சாலைகளில் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக படத்தில் பார்ப்பது போன்ற படங்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். இந்த வரைபடத்தை இன்று காலை கடற்கரை காமராஜர் சாலையில் மாநில கல்லூரிக்கு அருகே பார்த்தேன். இதில் குறிப்பிட்டுள்ள குற்றவியல் எண், பி.என்.எஸ் (BNS) 106 என்பது கவனமில்லாமல் வாகனத்தை ஓட்டி உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பது, இதற்கு ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை.
இதைப் பார்த்தவுடன் முதலில் வேண்டாத வேலையாகத் தோன்றினாலும், கொஞ்சம் சிந்தித்ததில் (என்ன செய்யச் சில நேரம் இப்படிப் புத்திசாலியாகிவிடுகிறேன்) நல்ல முயற்சி என்றே படுகிறது. விழிப்புணர்வுக்காகப் பலவற்றைச் செய்தாலும் தவறில்லை. ஓட்டுநர்கள் திருந்தினால் சரி. அதோடு எண்களைப் பார்க்கப் பார்க்கப் புதுக் குற்றவியல் சட்டங்களின் எண்களைத் தெரிந்து கொள்ள வசதியாகவும் இருக்கும். காவல்துறைக்கு நன்றி.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

