நம் மனதில் தோன்றும் எல்லாவற்றையும், சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டிய அவசியமில்லை, அது நம் மனதிலிருந்து தூக்கி ஏறியும் குப்பைத் தொட்டியில்லை. இருந்தும் அப்படிப் பகிரும் போது, கிடைக்கும் என நம்பும் ஓரிரு விருப்பக்குறிகளுக்கு மனது ஏங்குவது உண்மை. என்ன செய்ய?, என்று யோசிக்க, உதவிக்கு அழைத்தேன் சாட்-ஜிபிடி’யை.

கீழே நான் கொடுத்த “பிராம்ப்ட்” (உள்ளீட்டு வடிவமைப்பு), உடனிருக்கும் படங்களில் அதற்குக் கிடைத்த விடைகள்.

பிராம்ப்ட் = [
நான் ஓர் அறிவாளி. பல சிறந்த சிந்தனைகள் எனக்கு உதித்துக் கொண்டேயிருக்கும். அதை பேஸ்புக்கில் பகிரும் போது பலரும் அதைப் பற்றி, என் சிந்தனைகளைப் புகழ்ந்து எழுதுவார்கள். இப்படித் இன்றைக்கு எனக்குத் தோன்றிய எண்ணம்: ‘நம் பயத்தை நண்பரிடம் பகிரும் போது, அது குறைகிறது, நமக்கு நம்பிக்கை பிறக்க இது தான் முதல் படி‘. இதை நான் சமூக வலைத்தளங்களில் எழுதியிருந்தால் எனக்கு எந்த மாதிரி பாராட்டி கருத்துகள் வந்திருக்கும். அதை நீயே கற்பனை செய்து, ஓர் ஐந்து கருத்துகளை எழுதவும். நீயும் அறிவாளி தான். நன்றி.
]

Imaginative comments for my thoughts in Tamil from ChatGPT
Imaginative comments for my thoughts in Tamil from ChatGPT
உங்களைப் பாராட்ட சாட்ஜிபிடியை அழைக்கவும்
உங்களைப் பாராட்ட சாட்ஜிபிடியை அழைக்கவும்

நம் நண்பர்களை, வாசகர்களை விட நம் கருத்துக்கு எவ்வளவு சிறப்பாகக் கருத்து கூறி, பாராட்டுகிறது, பாருங்கள்.

இதெல்லாம் செயற்கை நுண்ணறிவின் கற்பனை தான் என்றாலும், நமக்கு வேண்டியது பாராட்டு தானே, அது எங்கிருந்து, யாரிடமிருந்து கிடைத்தால் என்ன? சொல்லுங்கள்?


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading