இன்றைய தேதியில் நிறுவனங்களில் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்து எடுப்பது என்பது மிகக் கடினமான செயல். அறிவித்த ஒரு வேலைக்கு முன்பைவிட பல மடங்கு எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வருகிறது. அவற்றில் பலவும் தவறாக, தேவையான வேலைக்குச் சம்பந்தமே இல்லாத வகையில் வருகிறது. அப்படி வந்த பல பல மைக்ரோசாப்ட் வேர்டு, பி.டி.எப். கோப்புகளை ஒவ்வொன்றாகப் பார்த்து, முழுவதும் படித்துத் தேர்வு செய்வ பல மணி நேரமாகும். இதைச் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு சுலபமாக்க முடியுமா? நிறுவனத்துக்கு வேலை ஆட்கள் வேண்டும் என்கிற அறிவிப்பையும் எழுத வைக்க முடியுமா?

மைக்ரோசாப்ட் கோ-பைலட் என்கிற இயற்றறிவு (புதிதாகப் படைப்புக்களை இயற்றக் கூடிய செயற்கை நுண்ணறிவு) வசதி, மைக்ரோசாப்ட் 365இன் மேல் அடிக்கு, கட்டணச் சந்தாதாரர்களுக்குக் கிடைக்கிறது. இதைக் கொண்டு நாம் முன்னர் சொன்ன, வேலைக்கு வந்துள்ள பல விண்ணப்பங்களை எப்படிக் கணினியே ஆராய்ந்து, நிறுவனம் கேட்டுள்ள தகுதிகள் இருக்கிறதா என்று சரி பார்த்து, மதிப்பிட்டு, தேர்வு செய்ய உதவுகிறது என்கிற செயல்முறை விளக்கத்தை இந்த காணொலிப் பதிவில் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளேன். இது கோ-பைலட் உங்களின் பற்றிய புரிதலை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். காணொலியைப் பார்த்துவிட்டு கருத்துகளை எழுதவும். உங்களின் நண்பர்களுக்கு பகிர்வதால் அவர்களும் கோ-பைலட்டை பற்றித் தெரிந்து கொள்ள உதவும்.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading