AI Imagination of a Richard Mille RM UP-01 Watch
AI Imagination of a Richard Mille RM UP-01 Watch

ஆடம்பரப் பொருள்களின் பயனை மட்டும் பார்த்து அதன் விலை தீர்மானிக்கப்படுவதில்லை. அது யாரால், எங்கு, எவ்வாறு தயாரிக்கப்பட்டது; எவ்வளவு அபூர்வமான வடிவமைப்பு; எப்படி விளம்பரம் செய்யப்படுகிறது; எந்தப் பிரபலம் அதை வாங்கியுள்ளார் என்பன எல்லாவற்றையும் சேர்த்தே அதற்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இந்தப் பதினெட்டு கோடி ரூபாய் ($1.8 மில்லியன் அமெரிக்க டாலர்) கைக்கடிகாரத்தில் மணி எப்படிப் பார்ப்பது என்றே புரியவில்லை. இதை யாராவது எனக்குப் பரிசளித்தால் கூட, அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது என்று குழம்பி அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று நினைக்கிறேன்.

எனது இந்தத் திடீர் கைக்கடிகாரப் பதிவு ஏன் எனக் கேட்கிறீர்களா?

இன்று சமூக வலைத்தளங்களில் இந்திய இரயிலில் ஒரு டிக்கெட் பரிசோதகர் இந்தக் கைக்கடிகாரத்தைக் கட்டியிருந்தது சர்ச்சையாகியுள்ளது – அந்தப் காணொலி உண்மையா என்று கூடத் தெரியவில்லை.

இதே நிறுவனத்தின் பெண்டீருக்கான கைக்கடிகாரத்தை முகேஷ் அம்பானியின் மருமகள் அணிந்திருந்த படமும் இணையத்தில் வலம் வருகிறது. அப்படி என்னதான் இந்தக் கடிகாரங்களில் இருக்கிறது என்று தேடி அவற்றின் படங்களைப் பார்த்தால், மணி எப்படிப் பார்ப்பது என்றே விளங்கவில்லை.

இத்தனைக் கோடி கொடுத்து வாங்கினால், நமக்கு மணி சொல்ல அவர்களே நம்மோடு இருபத்தி நான்கு மணி நேரமும் இருக்க ஒரு ரோபோவைக் கொடுப்பார்களா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும். நன்றி.

AI Imagination of Venkatarangan wearing a Richard Mille watch
AI Imagination of Venkatarangan wearing a Richard Mille watch

Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading