TV Show Review,  தமிழ்

Bridgerton Season 2

இதயம் (1991) முரளிக்கூட (ராஜா கதாபாத்திரம்) இரண்டு மணி நேரத்தில் தனது காதலை ஹீராவிடம் (கீதா கதாபாத்திரம்) சொல்லிவிடுவார். ஆனால் நெட்பிலிக்ஸ் ப்ரிட்ஜர்டன் இரண்டாம் சீசனில், இந்திய பெண் ‘கேட்’டும், வைகண்ட் ‘ஆண்டனி’ ப்ரிட்ஜர்டனைடும் அவர்களின் காதலை ஒப்புக்கொள்ள, அவர்களுக்கு எட்டு எபிசோடும், பன்னிரெண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிறது. இவர்களின் இந்தக் குழப்பத்தால் ராணி சரலோட்டின் திட்டங்கள் பாதிக்கப்படுகிறது, பாவம் அவர்களும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி இருப்பார்கள்!

கேட் சர்மாவாக சிமோன் ஆஷ்லேவும், வைகண்ட் ‘ஆண்டனி’ ப்ரிட்ஜர்டனாக ஜோனாதன் பைலேவும் அவர்களின் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் .

பல முறை உதடும் உதடும் உரசும் அளவுக்கிட்டே வந்தாலும், விலகிப் போய் நம்மைக் கடுப்பேற்றுவார்கள். ஒரு கட்டத்தில் நாமே எழுந்து உள்ளே போய், போதும்டா சாமி, முத்தம் கொடுத்து, காதலை சொல்லித் தொலைக்கவும் என்று கெஞ்சத் தோன்றிவிடுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.