
Sri Ananda Vinayagar Temple, Siruseri, Chennai
சென்னை அடையாறில் இருக்கும் ஸ்ரீ மத்திய கைலாஸம் விநாயகர் கோவில் மிகப் பிரசித்திப் பெற்றது. அந்தக் கோவில் நிர்வாகத்தினர் அங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறுசேரி ‘சிப்காட்’ மென்பொருள் பூங்காவிற்குப் பின்னால் இருக்கும் ‘புதுப்பாக்கம்’ என்கிற இடத்தில் ஒரு புது கோவிலை ஸ்தாபித்துள்ளனர். கோயில் கும்பாபிஷேகம் போன மாதத்தில் (14 பிப்ரவரி 2022) நடைப்பெற்றது, அந்த நிகழ்வின் காணொளி இங்கே. அன்று கூட்டமாக இருக்கும் என்பதால் நான் போகவில்லை, இன்று மதியம் கிளம்பிப் போய் வந்தேன். 2003யில் கட்டிடங்களே இல்லாமல் வயல்களாக இருந்த ஊர் இன்று அடையாளமே தெரியாமல் போய்விட்டது – அப்போது இந்த இடத்தைப் பார்க்க போன கோயில் நிர்வாகி ஒருவரோடு நான் துணைக்குப் போயிருந்தேன்.



இன்றும், சில வயல்கள் ஒரு புறம் சூழ (முக்கிய சாலைக்கு மறுபுறம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பல வந்துவிட்டது), ரம்மியமான ஓர் சூழலில் ஆனந்தமாக அருள்பாலிக்கிறார் ஸ்ரீ ஆனந்த விநாயகர். அவரோடு ஸ்ரீ ஆனந்த ஆஞ்சநேயர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ ஆத்யந்தப்ரபு, ஸ்ரீ மகாவிஷ்ணு. ஸ்ரீ அதித்யன் மற்றும் நவக்ரஹங்களும் சேர்ந்து பக்தர்களுக்காகக் காட்சியளிக்கிறார்கள்.
பெரிய உருவமாக இருந்தாலும் ஸ்ரீ ஆனந்த விநாயகர், பார்க்க கருணை ரூபமாக, அன்பாயிருக்கிறார். அவரை தரிசிக்கவும், தத்துருபமாக இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரைத் தரிசிக்கவுமே இந்தத் தலத்திற்குச் செல்லலாம்.
ஊரிலிருந்து தள்ளியிருப்பதாலும், பக்தர்கள் இன்னும் அதிகளவு வரவில்லை என்பதாலும், காலை சில மணி நேரமும், மாலையில் ஐந்து மணியிலிருந்து சில மணி நேரமும் தான் சன்னதிகள் திறந்திருக்கும்.
இருக்கும் இடம்:
சிறுசேரி பேருந்து நிலையத்திலிருந்து நடந்து இங்கே வந்துவிடலாம். ஹபீடாட் அப்பாசாமி ரியல் எஸ்டேட்ஸ் குடியிருப்புகள் (Habitat – Appaswamy Real Estates Apartments) என வழிகேட்டு வரலாம் அல்லது கூகிள் வரைபடச் செயலியில் உள்ளிட வேண்டிய முகவரி.












2 Comments
CHANDRASEKHARAN
Very nice explanation, felt like visiting,next opportunity great
venkatarangan
Thanks, glad you liked it.
Please do visit the temple and get the blessings of Sri Ananda Vinayagar.