
கண்ணில்பட்ட சாலைப் பாதுகாப்பு கவிதை
சென்னை மறைமலை நகர், சென்னை-திருச்சி (ஜி. எஸ். டி) தேசிய நெடுஞ்சாலையில் பார்த சாலைப் பாதுகாப்பு வாசகம்.
“கண் சொருகுதல் ஓட்டத்திற்கு ஆகாது”
நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது கவனம் மிக அவசியம். சிறு கவனக்குறைவுக் கூட ஆபத்தாக முடியும். அதனால் வாகனம் ஓட்டும் போது தூக்கம் வந்தாலோ அல்லது சோர்வாக இருந்தாலோ, ஓய்வு கட்டாயம். அதை உணர்த இதைவிட சுருக்கமாக, நச்சென்று சொல்ல முடியுமா?

