
Gopal Tooth Powder, a regular in Radio advertisements
கோபால் பல்பொடி – தமிழ் வானொலியைக் கேட்ட யாரும் இவர்களின் விளம்பரங்களைக் கேட்காமல் இருக்க முடியாது. “இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கைப் போன்ற நாடுகளில் மக்களின் பேராதரவைப் பெற்றது” என்ற வசனம் தமிழ் நாடக/சினிமா காமெடியில் பிரசித்தம். சின்ன வயதில் வீட்டில் கோல்கேட் பல்பொடி பயன்படுத்திய நினைவுண்டு. இருந்தும் கோபால் பல்பொடியைைப் பயன்படுத்தியதாக நியாபகம் இல்லை. அப்படியொன்றும் பெட்டிக் கடைகளுக்கே போகாத மேல் தட்டு (நுனி நாக்கு இங்கிலீஷ்) ஆசாமியெல்லாம் இல்லை நான் .
நேற்று காலை பண்பலையில் “கோபால் பல்பொடி” என்றுக் கேட்டவுடன் தெருக்கோடியில் இருக்கும் பெட்டிக்கடைக்குச் சென்று வாங்கி வந்து பல்துலக்கிப் பார்த்தேன். பற்கள் பளபளத்தது, ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை, சக்கரை/இனிப்பு தூக்கலாக்க இருந்தது.
நீங்கள் கோபால் பல்பொடியைப் பயன்படுத்தியதுண்டா? பிடிக்குமா?


One Comment
இனியன்
நான் பயன்படுத்தி உள்ளேன். அதன் சுவை அருமை. அது சரி, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கையில் கோபால் பல்பொடி பிரபலமாக வேறு எதாவது காரணங்கள் உண்டா? அறிந்துக் கொள்ள ஆவல்