இன்று காலை ரேடியோவில் (Radio City 91.1 சென்னை பண்பலையில்) இசை அமைப்பாளர் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் பேட்டி கேட்டேன். நாட்டில் நடக்கும் உண்மை நிலையை, அதில் அழகாகச் சொல்லியுள்ளர் என நினைக்கிறேன் (paraphrasing the interview from my memory):
“தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தமிழில் படிக்கக் கட்டாயப் படுத்துவது தவறு. தனியார் பள்ளியில் சேர்வதே ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற தான். தமிழ் ஆர்வமூட்டுவது, தமிழில் சிறந்த தேர்ச்சி பெறச் செய்வது பெற்றோர்களின் மற்றும் சமுதாயத்தின் கடமை. நானும் ஆங்கிலப் பள்ளியில் தான் படித்தேன், ஆனால் தமிழ் (நன்றாகவே) தெரியும், (பிழையில்லாமல்) பேசுகிறேன்“.
இதே தான் என் அனுபவமும். நானும் தனியார் ஆங்கிலப் பள்ளியில் தான் படித்தேன், எனக்கும் இரண்டாம் மொழி தான் தமிழ். என் அதிர்ஷ்டம் பள்ளியில் ஒரு நல்ல தமிழ் ஆசிரியர் கிடைத்தார், அவரும் என் பெற்றோரும் தான் என் தமிழ் ஆர்வத்திற்குக் காரணம். தற்போது தமிழில் மேலும் மேலும் படிக்க வேண்டும், ஓரளவிற்குப் பிழையில்லாமல் எழுத வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் (என் விருப்பதிலேயே) அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது, எந்தக் கட்டாயத்தினாலுமில்லை!
கூடுதல் தகவல்கள்:
தாய் மொழி கல்வி தான் சிறந்தது எனப் பலப்பல ஆராய்ச்சிகள் (இதைப் பார்க்கவும்) காட்டுகிறது. அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் என் (சிறுவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள்) தனிப்பட்ட விருப்பத்தில் நான் காசுக் கொடுத்து (அரசு மானியம் பெறாமல்) ஆங்கிலப் பள்ளியிலோ அல்லது ஜாப்பானியப் பள்ளியிலோப் படித்தால் அரசு என்னைக் கட்டாயப்படுத்தலாமா என்பது தான் கேள்வி? அரசு என்னை கவரலாம், சமுகம் என்னை ஊக்கப்படுத்தலாம், ஆனால் என்னை கட்டாயப்படுத்தலாமா ?
இந்த உலக வங்கிக் கணக்குப்படி தமிழ்நாட்டில் 18% தான் தனியார் பள்ளிகள் இருக்கிறது, அவற்றிலும் அனைத்தும் ஆங்கில வழி பள்ளிகள் அல்ல, அதில் ஒரு பங்கு தான்.
#ஆங்கிலக்கல்வி #Tamil #SecondLanguage #Schooling #EnglishMedium