தமிழ்

My collection of “Tamil” themed stamps and first day covers

தபால் தலைகள், அதுவும் சிறப்புத் தபால் தலைகள் மற்றும் முதல் நாள் அஞ்சல் உறைகள் என்றாலே எனக்கு ஒரு விதயிர்ப்பு, ஆர்வம். அப்படி ஒன்றும் நான் தபால் தலை சேமிப்பாலர் எல்லாமில்லை. ஒரு பத்தோ பதினைந்தோ வைத்துயிருக்கிறேன், இருந்தாலும் கிடைத்தால் விடமாட்டேன். அப்படித் தான் அன்லைன்னில் ஏதோ தேடப்போக இவை கண்ணில் பட வாங்கி விட்டேன், அனைத்தையும் அடுக்கி ஓட்டி சுவர் சட்டமாகச் செய்துவிட்டேன்.

முதலாவதில்: தபால் வில்லைகள் அனைத்தும் மறைந்த தமிழ் கவிஞர்கள், தமிழை/தமிழர்களைக் காத்த தலைவர்கள், தமிழுக்குப் பாடுப்பட்டவர்கள், தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழ்நாட்டைக் குறிப்பிடும் கருத்துடையவைகள். ஏனோ இதில் (இந்திய தேசிய தலைவர்) பால் கங்காதர் திலகரின் வில்லையும் நான் சேர்த்துவிட்டேன், நல்ல கூட்டாளிகளோடு தான் சேர்ந்துள்ளார்!

Stamps and first day covers on the theme of Tamil Poets and Tamil Leaders
Stamps and first day covers on the theme of Tamil Poets and Tamil Leaders1

இரண்டாவதில்: இரண்டாவது உலகத் தமிழ் மொழி மாநாடு 1968, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 கோவை, இலங்கை பொங்கல் விழா 2014, முண்டாசுக் கவி பாரதியார் நினைவு வெளியீடு 1960 சிறப்பு அஞ்சல் உறைகள் மற்றும் ராணி வேலு நாச்சியார், 2004 பொங்கல் விழா சிறப்புத் தபால் தலைகள்.

Stamps and first day covers on the theme of Tamil Festival and World Tamil Conferences
Stamps and first day covers on the theme of Tamil Festival and World Tamil Conferences2

#தமிழ் #கவிஞர்கள் #தலைவர்கள் #மாநாடு

1Featured in the frame:

 • Dr M.G.Ramachandran
 • Periyar Thiru E.V.Ramasami
 • Thiru Namakkal Kavignar
 • Thiru MaraiMalai Adigal
 • Thiru Ma.Po.Sivagnanam
 • Thiru V.G.Suryanarayana Sastriar alias Parithimar Kalaignar
 • Thiru Chakravarthi Rajagopalachari
 • Sri Bal Gangadhar Thilak – A National Leader, an exception in this list
 • Thiru Bharathidasan
 • Thirumuruga Kirubananda Variyar
 • Thiru Kalki Krishnamurthy
 • Thiru Sivaji Ganesan
 • Thiru Murasoli Maran
 • Thiru A.V.Meiyappan
 • Tamil Nadu Bride
 • Tamil Nadu Police

2Featured in the frame:

 • World Classical Tamil Conference – Kovai – 2010
 • Pongal – 2004
 • Sri Lanka Thai Pongal – Farmers Festival – 2014
 • Rani Velu Nachiyar – 2008
 • Bharati Day – 11.9.1960
 • Second International Conference – Seminar of Tamil Studies 1968

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.