
Happy for the cause of Harvard Tamil Chair
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்க உலகத்தமிழர்கள் பலரின் முயற்சியால் நன்கொடைகள் வந்து கொண்டேயிருக்கிறது. என்னைப் பொருத்தவரை கல்விக்கழகங்களில் ஆராய்ச்சிகளை நாம் எப்போதும் வரவேற்க வேண்டும். தமிழகத்தைத் தவிர்த்து அமெரிக்காவிலும் அதைச் செய்ய நாம் உதவினால் முடியும் என்றால், அது நல்ல விசயம் தான்.
இந்த முயற்சிக்குத் தமிழக அரசு, சமீபத்தில் ரூ.10 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி.
சில மாதங்கள் முன்பே, என் சிறிய பங்காக $50ஐ (₹3200) நன்கொடையாக அவர்களின் இணையத்தளத்தில் அனுப்பிவிட்டேன். இதைப்பார்த்து மேலும் பலர் கொடையளிக்க ஊக்கப்படுத்துவது தான் என் எண்ணம், என் பெருமைக்காக அல்ல 😇, நன்றி.
தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைவது எல்லா தமிழர்களுக்கும் பெருமை. தலைமுறை தாண்டி அன்னைத் தமிழுக்கு நாம் செய்யும் நன்மை இது.


