ஷான் எனது நண்பரின் நண்பர், அப்படித் தான் எனக்கு அறிமுகமானார் – பல ஆண்டுகளாக அவரை ஒரு மென்பொருள் வல்லுநராகத் தெரியும். அவருள் ஓர் எழுத்தாளன் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டிருப்பது எனக்குச் சமீபக்காலமாகத் தான் அவரின் பேஸ்புக் (Facebook) பக்கத்திலிருந்து தெரியும். அவரின் மூன்றாவது புத்தகமான இந்த “ஆண்ட்ராய்டின் கதை” வெளிவந்தவுடன் வாங்க நினைத்தேன். ஆனாலும் ஒரு திமிர், “ஆண்ட்ராய்டைப் (Android) பற்றி நமக்குத் தெரியாதது என்ன, அதை எதற்கு வாங்கிப் படிக்க வேண்டும்” – இலவசமாகக் கேட்கலாம் என்றாலும், என்னுள்ளே இருக்கும் புத்தகக் காதலன் என்னை அடித்துவிடுவானோ என எண்ணிக் கேட்கவில்லை – அப்படியே ஓராண்டும் ஆகிவிட்டது.

“தேடும் கண்களுக்கேற்ப நல்லவையும் கெட்டவையும் நிறைந்ததே செயலிகள் உலகம்” – ஷான் கருப்பசாமி

போன வாரம் அலுவல் காரணமாக ஷான் என் அலுவலகம் வந்தார், அப்போது அவரை ஒரு புத்தகம் கொண்டு வரச் சொல்லி காசுக் கொடுத்து (₹70) வாங்கிவிட்டேன். இன்று காலைச் சிற்றுண்டி முடித்து, புத்தகத்தைக் கையில் எடுத்த நான் மதிய உணவு வரை எழுந்திருக்கவில்லை. என்னைப் போன்ற மென்பொருள் பொறியாளர்களுக்கு ஆண்ட்ராய்டின் வளர்ச்சி பரிச்சயமானது தான் – அதைச் செல்பேசியில் தினமும் பயன்படுத்துகிறோம், அதற்குத் தினமும் செயலிகளும் எழுதுகிறோம், ஆனாலும் அதன் கதையைச் சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் (என்னைப் போன்ற கத்து குட்டிகள் எழுதினால் பலநூறு பக்கமாகும் விசயங்களை) எழுதியுள்ளார் ஷான். வாழ்த்துக்கள். மேலும், தற்போது வந்துள்ள பல தொழில்நுட்பங்களை அவர் தமிழில் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டின் கதையை உள்ளே சென்று பார்க்கலாம்:

தமிழில் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால், தூய தமிழில் தான் எழுத வேண்டும் – அப்படி எழுதி யாருக்கும் புரியாமல் செய்ய வேண்டும் என்பவர்கள் போல இல்லாமல், “எங்கெல்லாம் தமிழைப் பயன்படுத்த முடியுமோ பயன்படுத்தியிருக்கிறேன். ஆங்கில வார்த்தைகளையும் சரளமாகவே பயன்படுத்தியிருக்கிறேன்” என முகவுரையிலேயே சொல்லிவிடுகிறார். புத்தகத்தை எனக்கு அப்போதே பிடித்துவிட்டது.

கதையை 2007ஆம் ஆண்டு ஜனவரி 9ம் நாளில் ஆரம்பிக்கிறார், அப்போது ஆண்ட்ராய்டு பிறக்கவே இல்லை, எப்படி அது குறைப்பிரசவத்திலேயே செத்திருக்கும் எனச் சொல்லி நம் கவனத்தை ஈர்த்துவிடுகிறது புத்தகம். அப்போது வரை இருந்த செல்பேசி உலகத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள நம்மை அதற்கு முன்னம், குறிப்பாக 1947இல் வெளிவந்த முதல் மொபைல் போன் சேவைக்குக் கூட்டிச் செல்கிறார் ஆசிரியர். மொபைல் போன் (mobile phone) என்ற வார்த்தையே ஆட்டோ-மொபைல் (auto-mobile) போன் என்ற பெயரிலிருந்து வந்திருக்க வேண்டும் எனவும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

அடுத்து ஆண்ட்ராய்டில் வெளிவந்த எல்லாப் பதிவுகளையும் ஆப்பிள்-பை (பதிப்பு 1/version 1) முதல் நூகட் (பதிப்பு 7) வரை விவரிக்கிறார். அதைத் தொடர்ந்து “ஆண்ட்ராய்டு என்பது என்ன” என்று மூடிக்குள் இருக்கும் மென்பொருள் ரகசியங்களை விளக்க முயற்சிக்கிறார் – இந்தப் பாகம் இன்னும் நன்றாக (பெரியதாயில்லை) செய்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. ஷானுக்கு மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் (Windows) பிடிக்காது என எனக்குத் தெரியும், பில்கேட்ஸ் (Bill Gates) மேல் அவருக்கு பொறாமையும் போல, இரண்டு மூன்று இடங்களில் “இப்படித் தான்” பில்கேட்ஸ் உலகப் பணக்காரர் ஆனார் என மறக்காமல் சொல்லிச் செல்கிறார் – உலகில் பலர் மென்பொருட்களால் பணக்காரர்களாக ஆனார்கள் தானே, ஏன் பில்கேட்ஸை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டும்?

இன்று பெரும்பாலானவர்கள், என்னையும் சேர்த்து, தேவையோ இல்லையோ புதிதாக ஒரு போன் வந்தால் வாங்கி விடுகிறோம், இந்த மோகத்தை நாசுக்காக இப்படிச் சுட்டுக்காட்டுகிறார் – “என்னய்யா பெரிய ஆண்டராய்டு போன், என்னுடைய நோக்கியா போன் எனக்குப் போதும் என்று சொல்கிறீர்களா? அப்படியே தொடருங்கள். தேவையை நீங்களே உணராதவரை எந்தப்பொருளையும் வாங்க வேண்டியதில்லை

ஆண்ட்ராய்டின் கதை – ஷான் கருப்பசாமி

ஆண்ட்ராய்டின் கதை – ஷான் கருப்பசாமி

Categorized in:

Tagged in:

,