வழக்கமாகப் பத்திரிகைகளில் சிறந்த ஆசிரியர்களைப் பற்றி, சாதனையாளர்களைப் பற்றிப் படிப்போம். மாறுதலாகத் தமிழ் இந்துவில் மாணவர்களைப் பற்றி ஒரு தொடர் “மனதில் நிற்கும் மாணவர்கள்“.

மகிழ்ச்சியாகயுள்ளது. நானும் மீண்டும் ஒரு மாணவனாக வேண்டும் என்று என்ன வைக்கிறது.

முதல் கட்டுரையில் திரு பெருமாள்முருகன், அவரின் மாணவியான திரு கலைச்செல்வி என்பவரைப் பற்றி எழுதியுள்ளார். படித்துப் பாருங்கள்.

//நோபல் பரிசு பெற்ற வங்காரி மாத்தை அவர்களின் ஒரு கருத்து இது: ‘மேலே செல்லச் செல்லச் சில பெண்கள்தான் உள்ளனர்’. எனக்குள் பல எண்ணங்களைக் கிளர்த்திய வாசகம். பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளனர் என்று சொல்லிச் சிலரை உதாரணம் காட்டுபவர்களின் முகத்தில் அறையும்படியான கருத்து. இதனுள் புதைந்திருக்கும் ஏக்கமும் ஆதங்கமும் சாதாரணமல்ல. மேலே செல்லச் செல்லப் பல பெண்களைக் காணும் நிலை என்றைக்கு வரும்? மேலே செல்ல முடியாமல் பெண்களைக் கீழ் இழுப்பவை எவை?

யோசித்துக் கொண்டிருந்தபோது மனதில் திரும்பத் திரும்ப வந்த பெண்ணுருவம் கலைச்செல்வி.//