யான் (Yaan) என்றால் நான் என்று பொருள், ஆமாம் இந்தப் படத்தைப் பார்க்க போனது நான் தான். அதைப் பார்த்து அனுபவித்ததும் நானே தான். யான் யான் யானே தான்!

இந்தப் படத்தை நான் எதிர்ப்பார்த்து போனதற்கு  காரணம் ஹலோ எஃப். எம் தான். நீங்க நல்லா வருவீங்க நல்லாஆ வருவீங்க!. காந்தி ஜெயந்தி அன்று காலை 7 மணிக்கு (விடுமுறை நாளில் அவ்வளவு சீக்கிரம் எழுந்தது என் தப்பு தான்)  நடிகர் ஜீவா மற்றும் நடிகை துளசி யான் படம் பற்றி பேசிய  பேட்டி இருந்தது, அதில் ஜீவா தான் தேடி வேண்டி வேண்டி எற்றுக்கொண்ட படம் இது என்றார். இதுவரை ஓரளவு நல்ல படங்களில் நடித்த ஜீவாவிற்கு என்ன நடந்ததோ இதில் நடிக்க, அவரின் முந்தைய படமான “என்றென்றும் புன்னகை” கூட நன்றாக இருந்தது.  படமுழுக்க அவரும் இயன்றளவு கஷ்டப்பட்டு பார்க்கிறார் (பணம் கொடுத்து பார்க்கும் நாமும் தான்) ஆனால் ஒரு பருப்பும் வெகவில்லை (நம் கையில் இருந்த வெந்த பாப்கானை தவிர).

அப்படி என்ன தான் இருந்தது யான் படத்தில். விஷயமே படத்தில் ஒன்றுமே இல்லை என்பது தான் என் புலம்பலுக்கு காரணம். காமெடி இல்லை, லாஜிக் என்பது கொஞ்சம் கூட இல்லை, அருகில் பார்க்க விரும்புமளவு அழகான கதாநாயகி கூட இல்லை, பாட்டிற்கு ஒத்துப் போகும் காட்சியமைப்பும் இல்லை.

இயக்குனர் ஐயா, அது எப்படி Cliche (சலிப்பு தரும்) என்று சொல்லப்படும் அனைத்து விசயங்களையும் பட்டியலிட்டு படத்தில் சேர்த்துள்ளீர்கள்?

நான் சொல்லவதை நம்பவில்லையா. எங்கள் முன் வரிசையில் இருந்த பத்து பேரும் இடைவேலைக்கு பின் காணவேயில்லை.

என்ன கொடுமை சரவணன் இதெல்லாம்?

நிற்க.

முதல் சீனில் தெரியாமல் ஸ்லோ மோஷன் நல்லாயிருக்குனு சொன்னதைக் கேட்டுவிட்டு இயக்குனர் படத்தையே ஸ்லோ மோஷன்ல கொடுத்துவிட்டார். நானும் திரும்பி திரும்பி பார்த்தேன் இயக்குனர் மட்டும் கண்ணலப்பட்டுருந்தா, போதும் எல்லாதையும் நிறுத்திபோம் என்று சொல்லியிருப்பேன்.

The story starts with a terrorist being killed in a police encounter, with the hero saving heroine live scene. They fall in love. Heroine’s father objects by ridiculing the hero that he is unemployed, the father is encouraged by her Aunt’s son who is in lust for her. On rage, Hero accepts a job in Balusistan – a strict law following the Islamic nation. On arrival is arrested for carrying drugs and punished for beheading in public. Hero’s grandmother goes to the hospital, for saving her Heroine goes and saves Hero. In the meanwhile Hero fights inmates, the prison warden in Prison, exposes the terrorist to the world and kills him in a desert chase. Finally crosses two poles in desert landmarked “Border” (otherwise we will miss it you know). END.

Yaan

இந்த படத்தைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள காஷ்யம் வித் பாஸ்கீ‘யின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

Categorized in:

Tagged in:

, ,