எனக்கு நகைச்சுவை நாடகங்கள் பிடிக்கும், அதுவும் S.Ve.Shekar மற்றும் Crazy Mohan என்றால் இன்னும் இஷ்டம். இரண்டு மணி நேரம் கவலைகளை மறந்து சிரிக்கலாம். வாழ்க்கையில் எல்லாமே அர்த்தத்தோடு எல்லா நேரமும் இருக்க வேண்டுமா என்ன?, யோசிக்காமல் கொஞ்சம் தான் சிரிக்கலாமே!. சேகரின் அனைத்து நாடகங்களின் ஒலிப்பதிவுகளை வைத்துள்ளேன், காரில் செல்லும் போது அவ்வப் போது கேட்பேன். அந்த நாடகங்களின் வசனங்கள் அதில் நடித்துள்ள நடிகர்களை விட எனக்கு மனப்பாடம், அதே நாடங்களை அரங்கில் பார்க்கும் போது அவர்கள் எந்த வசனத்தையாவது மாற்றி பேசினால், நான் கண்டுபிடித்து விடுவேன் (பெரிய துப்பறிவு நிபுணர் போல!).

Vani Mahal

அதனால் இன்று ஒரு புது நாடகம் (Brand New comedy) ”மோதி விளையாடு பாப்பா” எனப் பார்த்தவுடன் அன்லைனில் புக் செய்து வந்தேன்.

S Ve Shekar Modhi Vilaiyadu Paappaa

நாடகத்தின் அறிமுகத்திலேயே சேகர் இது அவர்களின் பழைய நாடகம் (1990இல் வெளிவந்த) எப்போதும் நீ ராஜா தான் இப்போது புது பெயரில் என்று சொல்லிவிட்டார். ஏமாற்றம், இருந்தாலும் காசுக் கொடுத்து வந்து விட்டதால் இருந்து பார்த்தேன், ரசிக்கவும் ரசித்தேன்.

தேர்தல் வருவதால் எப்போதும் போல சேகர் சில இடங்களில் அரசியல் களந்து அடித்தார், சமீபத்தில் அவர் பா.ஜ.கவில் சேர்ந்ததால் மோடி அதரவு, அதை ஒதுக்கிப் பார்த்தால் நாடக முடிவில் அவர் அனைவரும் Election Commission இணையத்தளத்தில் உங்களின் பெயரை சரிப்பார்க்கவும், தேர்தல் அன்று ஓட்டும் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டதை பாராட்டலாம்.

Tagged in: