வாங்கி ரொம்ப நாட்கள் ஆயினும் போன வாரம் தான் இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் இந்த புத்தகத்தைப் (முன்று விரல்) படித்தேன். அரம்பித்த பிறகு முழுவதும் முடிக்கும் வரைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம், யதார்தம்.

மென்பொருள் தொழில் சார்ந்தவர்களைப் பற்றி சாதாரண நடையில் எழுதியிருப்பது புத்தகத்தின் சிறப்பு. நானும் மென்பொருள் தொழிலில் இருப்பதால் கதாப்பாத்திரங்களின் கஷ்டங்களை உணர்வுகளை நன்றாக உணர முடிகிறது.

ஒவ்வொரு காட்சியும் என் கண் முன்னே நடந்ததுப் போல உணர்த்தேன். நான் நாவல்கள் அவ்வளவாக படிக்க மாட்டேன், இருந்தும் ரொம்ப ரசித்தேன்.

நாய் வளர்ப்போர் சங்கத்தின் மென்பொருளை லண்டனில் கதாநாயகன் நிறுவும் போது நடக்கும் நிகழ்ச்சிகள் நல்ல நகைச்சுவை, ரொம்பவும் ரசிக்கும் படியிருந்தது. கதையின் முடிவு முற்றிலும் எதிர்பாராதது.

தமிழ் தெரிந்த அனைத்து மென்பொருள் வல்லுனர்களும் படித்து மகிழ வேண்டிய ஒரு புத்தகம்.

மூன்று விரல் - இரா முருகன்

மூன்று விரல் – இரா முருகன்

Categorized in:

Tagged in:

,