வார விடுமுறை, என் சகோதரிகள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் வந்திருந்தார்கள். பேசிக் கொண்டிருந்தப் போது திடிரேனயுதித்த யோசனையின்று சினிமாவிற்கு போகலாமென்று. எதிர்ப்பார்த்த மாதிரி சத்தியம்/ஐனாக்ஸ் திரையரங்களில் டிக்கெட் இல்லை. இணையத்தில் பார்த்ததில் மயாஜாலில் 3:10 காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. காரை எடுத்துக் கொண்டு தி.தி. என்று மாம்பலத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலை (30 கி.மி.) சென்றோம். எங்கள் பயணம் வீண் போகவில்லை, கமல் (Kamal Haasan) ஏமாற்றவில்லை. ஒரு நல்ல படத்தை அழகாக கொடுத்துள்ளார்.

ரொம்ப இழுக்காமல், முன்கதைகளுக்குச் செல்லாமல் ஒன்னே முக்கால் மணியளவில் ஒரு ஆங்கிலப்பட பாணியில் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சக்கிரி டோளேட்டி (Chakri Toleti). மோகன்லால் (Mohanlal) அலட்டிக் கொல்லாமல் தன் பாத்திரத்தைச் செய்துள்ளார். வசனம் சில வாரங்களுக்கு முன் நான் படித்து ரொம்பவே ரசித்த மூன்று விரல் புத்தகத்தின் ஆசிரியர் இரா.முருகன் தான், நச்சென்று ஆழமாகவும் ஆழகாகவும் இருந்தது. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

படத்தின் விமர்சனத்தை ஏற்கனவே பலர் தங்களின் வலைப்பூக்களில் என்னை விட நன்றாக சொல்லிவிட்டதால் அதன் முகவரிகள் இங்கே: Cable சங்கர் வலைப்பக்கம், Prakash வலைப்பக்கம், விவசாயி வலைப்பக்கம்.

உன்னைப் போல் ஒருவன் (Unnaipol Oruvan) – நல்ல படம், பார்க்க வேண்டியப் படம்.

உன்னைப் போல் ஒருவன்

உன்னைப் போல் ஒருவன்

Categorized in:

Tagged in:

,