
Ninaithale Inikkum (2009)
“நினைத்தாலே இனிக்கும்” – ஒரு நல்ல தலைப்பை , ஒரு (பழைய) நல்ல படத்தின் பெயரை இப்படி ஒரு சுமாரான படமெடுத்து கெடுக்காமலிருந்திருக்கலாம்.
ஒரே கல்லூரியில் படித்தவர்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே கல்லூரியில் ஒன்று சேர்கிறார்கள், அப்போது ஒரு கொலை முயற்சி, அதற்குப் பின்னால் முன்பு நடந்த ஒரு கொலை, காதல். படிக்க சுவாரஸியமாக தெரியும் இந்தக் கதை தான் ‘நினைத்தாலே இனிக்கும்’ – மலையாளத்தில் வெளியான கிளாஸ்மேட் படத்திலிருந்து எடுத்தது. ஒரு நல்ல கதையை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தப் படத்தை சொல்லலாம்.
எட்டு வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் கதாபாத்திரங்களின் தோற்றங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஷக்தியை ஏன் எல்லோருக்கும் பிடிக்கும், அவர் அப்படி என்ன சாதனை செய்த மாணவர் என்பது புரியவில்லை; அதனால் அவரது மரணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை; ப்ரியாமணி பாத்திரத்தோடு ஒட்டவேயில்லை; ப்ரியாமணி-பிருத்விராஜ் காதலில் எந்த ஒரு அழுத்தமும் அவர்களுக்குள் ஒரு இற்பும் தெரிவில்லை.
மொத்தத்தில் இந்தப் படத்தைப் பற்றி வெப்துனியவில் சொன்னதுப் போல – நினைத்தாலே இனிக்கும், நினைத்தாலே கசக்கும்

