செஃப் தாமு

செஃப் தாமு அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.

டிவியில் அடிக்கடி பார்த்துப் பிடித்துப் போனவர். அதற்குக் காரணம் அவரின் சிரித்த முகம்.

2021ஆம் ஆண்டு எனது நண்பர் ஜோனா ஸ்டிஃபன் அவர்களின் நிறுவனத்தின் ஆண்டு விழாவில் அவரைச் சந்தித்தேன். மேடையில் அவருடன் நின்று எனது சந்தேகங்களைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது ஓர் மகிழ்ச்சியான தருணம்.

அதற்கு முன்னர் அதே நிகழ்வில் அவரின் உரையை, அவர் கடந்து வந்த பாதையை அவர் நகைச்சுவையாகச் சொல்லியது உந்துதலாக இருந்தது. அதில், இன்றும் எனது நினைவில் நிற்பது, சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வாழ்வில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்ததை அவர் விவரித்தது. ஒருவரால் எப்படி இவ்வளவு விதமான பணிகளைச் செய்ய முடியும்? அதற்கு எப்படித் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.

With Chef Damu
With Chef Damu
With Chef Damu
With Chef Damu

இந்திய அரசின் பத்மஶ்ரீ விருதைப் பெற்றவர். கின்னஸ் சாதனையாளர். முனைவர் பட்டம் பெற்றவர். கல்லூரி முதல்வர். தொலைக்காட்சி பிரபலம். இருபது நூல்களுக்கும் மேலாக எழுதிய எழுத்தாளர். சினிமா நடிகர். புகழ்பெற்ற சமையல் கலைஞர். இப்படி அவரின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

திரு தாமு அவர்கள் இறைவனடி சேரப் பிரார்த்திக்கிறேன்.


Discover more from Mangoidiots.com

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots.com

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading